மு.இளங்கோவன் இணையத்தில் வாசிக்கும் பலருக்கும் அறிமுகமானவர். தமிழாய்வில் ஆர்வமும் தொடர்ந்த முயற்சியும் உடையவர். தமிழ் இணையத்தை கல்லூரி மாணவர்களுக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதற்காக கல்லூரிகளில் தன் சொந்த முயற்சியில் இணைய அறிமுக அரங்குகளை நடத்தி வருகிறார். இணையம் கற்போம் என்ற நூலையும் எழுதியிருக்கிறார் http://muelangovan.blogspot.com
தமிழாய்வில் ஆர்வமுள்ளவர். ‘அயலகத் தமிழ் அறிஞர்கள்’என்ற இவரது நூலில் தமிழகத்துக்கு வெளியே தமிழ் வளர்க்கும் அறிஞர்களின் வாழ்க்கையையும் பங்களிப்பையும் அறிமுகம் செய்திருக்கிறார்
புதுச்சேரியில் ‘பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில்’ தமிழாசிரியராக பணியாற்றுகிறார் இளங்கோவன்
இளங்கோவனுக்கு என் வாழ்த்துக்கள்
பிற தமிழ் விருதுகள், தினமணி செய்தி