காந்திக்குமா…கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

அந்த காந்தி குறித்த நக்கல் கட்டுரை நீங்கள் எழுதியதா இல்லை வேறு யாராவது எழுதியதா? நான் காந்தியின் நோக்கங்களை எல்லாம் முழுமையாக ஏற்பவன் அல்ல என்றாலும் இம்மாதிரி அரைப்பட்டைக்கு கீழே அடிக்கும் விமரிசனங்களுக்குரியவரல்ல அவர் என்றே நினைக்கிறேன்.  அது ஒரு அங்கதத்தொனி கொண்டதாக இருந்தாலும் உங்கள் தகுதிக்கு ஏற்றதாக இல்லை. மன்னிக்கவும்

ஸ்ரீனிவாச கண்ணன்

அன்புள்ள ஸ்ரீனிவாசக் கண்ணன்,

நான் மற்ற கட்டுரைகளில் என்ன எழுதியிருக்கிறேனோ அதுதான் இதிலும். இது ‘சாத்தான்’ எழுதியது. கடவுள்பாதி மிருகம்பாதி கலவை

ஜெ
அன்புள்ள ஜெ

மகாத்மா காந்தியை இவ்வாறு நிங்கள் தாக்கி எழுதுவீர்கள் என நினைக்கவே இல்லை. மனம் மிகவும் கஷ்டப்பட்டது. அவரை மொத்தமாகவே மறுதலித்து இருக்கிறீர்கள். காந்தியின் நோக்கத்தையும் செயல்பாடுகளையும் திட்டமிட்டு கேவலப்படுத்துபவர்கள்கூட இதைமாதிரி எழுதமாட்டார்கள். வன்மையாக கண்டிக்கிறேன்

சரவணன்

அன்புள்ள சரவணன்

நீளமான கட்டுரைகளை ‘ஒரு கிள்ளு உப்புடன்’ தான் எடுத்துக்கொள்ள முடியும் என சிலர் சொன்னார்கள். ஆகவே ஒரு கிள்ளு கரிப்பு. வேறென்ன செய்ய?

ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் இணையதளத்தில் காந்தியை விமரிசனம் செய்து நீங்கள் எழுதிய கட்டுரையை வாசித்து மிகுந்த மனக்குழப்பம் அடைந்தேன். காந்தியைப்பற்றி நீங்கள் பாஸிட்டிவ் ஆக எழுதிய கட்டுரைகளை வாசித்து வந்த போது இந்த கட்டுரை சோற்றில் கல் போல தட்டுப்பட்டது. எதையுமே விமரிசிக்கலாம் என்ற எழுத்தாளத்திமிர்தானே இதற்குக் காரணம்?

செம்பூரான்

அன்புள்ள செம்பூரான்

கண்டிப்பாக, அதே

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் சார்,

தங்களின் முந்தைய காந்தி குறித்த கட்டுரைகளை எந்த அளவிற்கு தீவிரமாக ரசித்துப் படித்தேனோ அதே போன்று இதையும் படித்து சிரித்தேன். நீங்கள் எழுதியதுதானா இது?  This is equally beautiful.  தங்களின் சமநிலையைய் கண்டு வியக்கின்றேன்.

elamparuthy


அன்புள்ள இளம்பரிதி,

எதைக்கண்டு சிரிக்க முடியவில்லையோ அதனுடன் நமக்கு உறவும் இல்லை அல்லவா?
ஜெ

முந்தைய கட்டுரைகாந்தி என்ற பனியா – 1
அடுத்த கட்டுரைவாஞ்சி,ஆஷ்,வேங்கடாசலபதி