அகில் அவர்களை ஆசிரியராகக் கொன்டு வெளிவரும் ஒரு குறிப்பிடத்தக்க இணைய தளம். http://www.tamilauthors.com/5.html . ஈழத்தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய தகவல்கள் இதில் உள்ளன. அ. முத்துலிங்கம் அவர்களின் ஒலிப்புத்தகம் வெளியீட்டுவிழாவைப்பற்றிய காணொளி நிகழ்ச்சி இதில் உள்ளது. தொலைதூரத்தில், கனடாவில்,நடந்த ஓர் நிகழ்ச்சியை நேரில் காண்பது போல் இருந்தது. பாதிபேர் தெரிந்தமுகங்கள். மீதிபேர் பத்து வருடத்தில் புதிதாக உருவாகி வந்தவர்கள்
முகப்புப் பக்கத்தில் வைரமுத்துவின் பெரிய படத்துக்குக் கீழே குட்டியூண்டாக ஜெயகாந்தன் கொடுக்கப்பட்டிருப்பதில் இருந்து, புதுமைப்பித்தனுக்கோ அசோகமித்திரனுக்கோ இல்லாத முக்கியத்துவம் சிவசங்கரிக்கும் கல்கிக்கும் இருப்பதில் இருந்து ஆசிரியரின் இலக்கிய ஞானத்தை ஒருவாறாக ஊகிக்க முடிகிறது. உள்ளே கொடுக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்களில் முக்கால்வாசிப்பேரை நான் கேள்விப்பட்டதே இல்லை. தினமலரில் கடைசிப்பக்க கவிதை ஏதாவது எழுதுபவர்களாக இருக்கும். ஆனால் எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் பெயர்கள் இல்லை. காலப்போக்கில் பல ஆயிரம் எழுத்தாளர்களை இவ்விணையதளம் ஒரு குடைக்கீழ் திரட்டக்கூடும். ஏன், ஒரு அரசியல்கட்சியாக மாறவும் கூடும்
இருந்தாலும் அ.முத்துலிங்கம் விழா போன்ற சில தகவல்களுக்காக இதை ரசித்தேன். இம்மாதிரியான முயற்சிகளுக்கு ஏதோ ஒருவகை பயன் இருக்கத்தான் செய்கிறது
ஜெ
எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் சிறுகதை ஒலிப்புத்தகத்தின் வெளியீட்டு விழா. http://www.tamilauthors.com/video%20links.html
ஜெ