ம.பொ.சி- கடிதங்கள்

வேளாளர்கள் இத்தனை வீரமாகவா இருப்பார்கள்.புலியெல்லாம்கூட இருக்கிறது. மரபின் மைந்தன் முத்தையா வீட்டில்கூட புலிகள் கிடையாது.

அன்புள்ள திரு.ஜெயமோகன்

சிங்கம் இருக்கும் இடத்தில் புலிகள் இருக்காதல்லவா..

மேலும் அந்தத் தளத்தில் இருக்கும் புகைப்படங்களில் வ.உ.சி.,புதுமைப்பித்தன் ஆகியோரும் சோழிய வேளாளர்கள் இல்லை என்பதால்,அநேகமாக அந்தப் புலிகள்தான் சோழிய வேளாளர்களாக இருக்க வேண்டும்

மரபின் மைந்தன் முத்தையா

அன்புள்ள ஜெ

மபொசியை கோமாளியாகக் காட்டியதில் குமுதம் பத்திரிகைக்கு பெரும் பங்குண்டு என்று உரையில் சொன்னீர்கள். அந்த வரி பதிவான உரையில் இல்லை. குமுதம் எல்லாரையும்தான் கோமாளியாக காட்டியது என்பது என்னுடைய புரிதல்.

சிவா

அன்புள்ள ஜெயமோகன்

நீங்கள் இனிமேல் எழுதும் நகைச்சுவைக் கட்டுரைகளுக்குக் கீழே ‘நான் இந்தப்பதிவில் சொல்வதெல்லாம் நகைச்சுவை, நகைச்சுவையைத்தவிர வேறொன்றுமில்லை. வேறு எல்லாவித சாயல்களும் தற்செயல்களே’ என்ற வாக்குமூலத்தைச் சேர்க்கலாமே

மபொசிக்கிராமணிப்பிள்ளை
பதிவை வாசித்த உடனே எழுதத்தோன்றியது

ராஜாராம்

அன்புள்ள ராஜாராம்

’எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை. கட்டுரைகள் அசல் நெய்யில் செய்யப்பட்டவை அல்ல’ என்ற சத்தியவாக்கியத்தையும் இணைக்கலாமென்றிருக்கிறேன்

ஜெ

நேற்று சென்னையில் ஜெயமோகன் உள்ளிட்டோர் பங்குபெற்றுப் பேசிய ம.பொ.சி. நூல்கள் விமர்சன நிகழ்வின் ஒலிப்பதிவு ….

http://yuvabharathy.blogspot.in/2013/12/blog-post_15.html

யுவபாரதி

முந்தைய கட்டுரைகுகைகளின் வழியே – 19
அடுத்த கட்டுரைநித்யாவின் கையெழுத்து