லோகி கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ,
லோகிதாஸ் அவர்களுடனான உரையாடல் நுட்பமாக அமைந்திருந்தது. கலையை நேசித்த ஒரு கலைஞனின் மனம் அதில் பிரதிபலித்தது. லோகி தியான நிலயை பற்றி விளக்குகையில், முதல் தடவையாக சினிமாவின் மீது மோகத்தை தாண்டி மரியாதை ஏற்பட்டது. கலை உயர்ந்த நோக்கங்களை சொல்வதாக  இருக்க வேண்டும் என்பதை விட, கீழான எண்ணங்களை தூண்டும் சினிமாவிற்கு எதிராகவே அவர் இருந்தார் எனத் தோன்றுகிறது.

நன்றி,
ஆனந்த்

 

அன்புள்ள ஆனந்த்,

லோகியைப்பற்றிய நினைவுகளை உருவாக்கியது அந்தப் பேட்டி. அவரது ஆழமான குரல், அறம் என்று அவர் சொன்னவற்றின் மீது அவருக்கு இருந்த அழுத்தமான நம்பிக்கை ஆகியவற்றை அதில் மீண்டும் வாசித்தேன். அவரது இழப்பை அழுத்தமாக அப்போது உணர்ந்தேன்.

ஜெ

 

அன்புள்ள ஜேமோ 

லோகியின் நீண்டபேட்டியை இருமுறை வாசித்தேன். சினிமாவை அவர் எடுத்துக்கொண்டிருக்கும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது. நாம் இங்கே சினிமாவை இரண்டு அடிப்படைகளில் மட்டுமே பார்த்துக்கோன்டிருக்கிறோம். ஒன்று மசாலா அடிதடி படங்கள். இலலாவிட்டால் போர் அடிக்கும் கலைபப்டங்கள் என்னும் அறிவுஜீவிப்படங்கள். சினிமா என்பது ஒரு நிகழ்த்துகலை. ஆகவே அது ரசிகன் இல்லாமல் செயல்பட முடியாது. அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு என்ன ரசிகர்கள் இருக்கிறார்கள்? அவர் யாருடன் உரையாடுகிறார்? நிகழ்த்துகலை என்பது எப்போதும் அது யாருடன் பேசுகிறதோ அவர்களையும் தன் வடிவத்துக்குள் சேர்த்துக்கொள்ளும். அப்படிபபர்த்தால் லோகி போன்ற கலைஞர்களே உண்மையான இந்திய சினிமாவை உருவாக்கினார்கள் என்று தோன்றுகிறது.

சிவராமன்

[தமிழாக்கம்]

அன்புள்ள சிவராமன்

கலைபப்டங்களைப் பற்றி நான் ஒன்றும் கருத்து சொல்வதற்கில்லை. நான் அவற்றை அதிகமாக பார்த்தவனல்ல. எனக்கு அதற்கான பொறுமை இல்லை. எனக்கு பிடித்தமான சினிமாக்கலை லோகியும் பரதனும் பத்மராஜனும் எம்டியும் தான் கொடுத்திருக்கிறார்கள்

ஜெ

 

அன்புள்ள ஜே,

லோகி பேட்டி நன்றாக இருந்தது. ஆழமாகவும் அந்தரங்கமாகவும் சொல்லியிருந்தார். பல இடங்களில் ஆகா இதுதானே உண்மை என்று நினைத்துக்கொண்டேன். அருமையான கலைஞன் .நான் அவரது ஜாதகம் என்ற படத்தை மட்டுமே பார்த்திருக்கிறேன். அது ஒரு கிளாஸிக்

சண்முகசுந்தரம்
சென்னை

 

 

ஏ.கே.லோகிததாஸ்:நீண்ட உரையாடல் 2

ஏ.கே.லோகிததாஸ்:நீண்ட உரையாடல்-1

அஞ்சலி: லோகித் தாஸ்

மலையாள சினிமா ஒரு பட்டியல்

திரிச்சூர் நாடக விழா

முரளி

லோகி:கடிதங்கள்

லோகி.5, தனியன்

லோகி4,தனியன்

லோகி. 3, ரசிகன்

லோகி,2. கலைஞன்

லோகி 1..காதலன்

 

 

முந்தைய கட்டுரைமிஷனரிவரலாறு, மதம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுகைப்படங்கள் கடிதங்கள்