இயற்கைவேளாண்மை, உலகமயம்:ஒரு கடிதம்

ஜெயமோகன் அவர்களுக்கு,

                                                 திரு.பாலாஜி சங்கர் என்பவர் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு அதைப்பற்றி தன் அனுபவங்களை இனைதளத்தில் http://www.earth.org.in/  எழுதிவருகிறார்.இவர் ஒரு கணிப்பொறியாளர்.குறைந்த கட்டுரைகளே என்றாலும் நேர்மையானவை.

இந்திய வளர்ச்சி பற்றி எழுதியிருந்திர்கள்.சென்செக்ஸில் இந்தியாவின் மூன்று சதவீதத்திற்க்கும் குறைவான மக்களே முதலிடு செய்கிறார்கள்.

இனி யார் ஆட்சி செய்தாலும் உண்மையில் உலகம் , பெப்ஸி, கோப் போன்ற கார்ப்பரேட்களால்தான் ஆட்சி செய்யப்படும்.’பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலில் கதிர் கம்யூணிசத்தின் வெற்றி அது பேச்சுவார்த்க்கான மேடையை அமைத்துக்கொடுத்துதான் என்பார்.இப்போது கார்ப்பரேட்கள் அதைகூட விரும்புவதில்லை.

தேவைப்படுவது ஊர் மையம்.

    இந்தியாவின் கிராமபுறங்கள் பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைந்திருக்கிறதென்றால் ஏன் முன்றில் ஒரு பங்கு நிலத்தில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் இருக்கிறது.மக்கள் ஆதரவு இல்லாமல் ஒரு கொரில்லா அமைப்பால் ஏப்படி தொடர்ந்து முன்னேற முடியும்.எல்லாம் சரியாகயிருக்கிறதென்றால் அவர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்.

சே குவேரா காங்கோவிலும் , பொலிவியாவிலும் தோற்று போனதற்கு பின்னால் மக்கள் ஆதரவுயிண்மையை காரணம்.

மருத்துவதுறை லாபம் கருதி மட்டுமே செயல் புரிகிறது என்று எழுதியிருந்திர்கள்.91க்கு முன்பு மருத்துவ துறை அப்படியில்லையே.

அனைத்தும் கார்ப்பரேட் மயமாகும்போது மருத்துவ துறை மட்டும் ஏப்படி தனித்து விளங்கும்.

புஷ் சமிபத்தில் சொன்ன கருத்துக்கு எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.இந்தியாவில் நகரமயமான மக்கள் தொகை 30 கோடி.

அமெரிக்காவின் மக்கள் தொகையே முப்பது கோடிதான்.அதில் நகரமயமான மக்கள் 88 சதிவிகிதம்.

நகரமயமாதல் அதிகரித்தால் அனைத்து வகையான உட்கொள்ளுதலும் அதிகரிக்கவே செய்யும்.இந்த

 உட்கொள்ளுதல் அமெரிக்காவை காட்டிலும் இன்றைய நிலையில் குறைவென்ற போதிலும் சிக்கிரத்தில் இது மாறும்.

நன்றி,

ச.சர்வோத்தமன்.

நன்றி,

ச.சர்வோத்தமன்.

முந்தைய கட்டுரைஜெ.சைதன்யா ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஇந்து தத்துவ மரபு – ஒரு விவாதம்