தேவாரம்

தேவாரம் பாடிய மூவர், சம்பந்தர், அப்பர், சுந்தரர்  மூவரும் வழிபட்ட கோயில்கள் பல. அவற்றுள், தேவாரப் பதிகம் பாடிப் பரவிய கோயில்கள் உள.தேவாரப் பதிகம் பாடிப் பரவிய கோயில்களுள்  275 கோயில்களுக்கான பதிகங்கள் நமக்குக்  கிடைத்துள்ளன.

 

அந்த 275 கோயில்களுக்கும் போக விழைபவர் பலர். போக முடியாதவர்கள்,

போகக் கூடியவர்கள், நேரில் வழிபட்டு வந்தவர்கள் யாவருக்கும் அக்கோயில்கள் பற்றிய காணொலி குறுந்தட்டாகக் கிடைக்கிறது.

 

மதுரை, இராம்சி நாட்டுப்புற ஆய்வியல் நிறுவனத்தினர்  அக்கோயில்கள் அனைத்துக்கும் சென்று, காணொலிப் படங்களெடுத்து, ஒலி சேர்த்து, பார்பபோர் பத்திப் பரவசமாகுமாறு பதிவுசெய்து 6 குறுந்தட்டுகளில் விலைக்குத் தருகின்றனர்.

 

அந்தக் காணொளிப் படங்களை இராம்சி நிறுவனத்தாரின் அன்பளித்ததால்

www.thevaaram.org மின்னம்பல தளத்தில் பார்க்கலாம். கோயில் வரலாற்றுடன் பார்க்கலாம், கேட்கலாம். பதிகத்தில் ஒவ்வொரு பாடலுடனும்  பார்க்கலாம் கேட்கலாம்

 

அவ்விடத்தில் தலைப்புக்கு அடுத்த பலகையைச் சொடுக்குங்கள்.

கோயில்களைப்  பாருங்கள் புகழக் கேளுங்கள்.

நன்றி

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

முந்தைய கட்டுரைஏ.கே.லோகிததாஸ்:நீண்ட உரையாடல்-1
அடுத்த கட்டுரைஏ.கே.லோகிததாஸ்:நீண்ட உரையாடல் 2