சென்னையில் சந்திப்பு

வெள்ளையானை விழாவுக்காகவும் சினிமா வேலைகளுக்காகவும் நேற்று முன் தினம் சென்னை வந்தேன். விடுதியில் தங்கியிருந்தேன். நேற்று மாலை மருத்துவர் தங்கவேல் அவர்களில் வீட்டில் சந்திக்கலாமென திடீரென முடிவாயிற்று. காரணம் சென்னைக்கு வெள்ளையானை நூல்வெளியீட்டுவிழாவை ஒட்டி வந்திருந்த நண்பர்கள் எல்லாம் அங்கே ஓரே இடத்தில் தங்கலாமென நினைத்தோம். அறிவிப்பைத்தொடர்ந்து முப்பது நண்பர்கள் வந்திருந்தனர்.

மாலை ஆறு மணிமுதல் இரவு இரண்டரை வரை நீண்ட அரட்டையில் கொஞ்சம் தீவிர இலக்கியம் கொஞ்சம் சினிமா நிறைய வேடிக்கைகள். பொதுவாக எந்த திட்டமிடலும் இல்லாத போகிறபோக்கிலான உரையாடலாக அமைந்தது. இத்தகைய சந்திப்புகளுக்கு நினைவுகளில் எப்போதும் ஓர் அழியா இடமுண்டு

இன்று காலையில் அடையாறு ஓரமாக ஒரு நடை

முந்தைய கட்டுரைபுதியவர்களின் கதைகள் :2 — பாவண்ணன்
அடுத்த கட்டுரைபுறப்படுதல்