‘மீன்கள்’ என்ற தலைப்பு அபாரம். மிகப் பொருத்தமான படிமம். அதே நீர்நிலைக்குள் உறையும் மீன்தான். அதன் எல்லையும் அதுதான். ஆனாலும் தன்னிலும் சிறிய மீனை விழுங்கவே செய்கிறது. ‘எவ்வளவு சிறிய மீனாக இருந்தாலும் தன்னிலும் சிறியதை விழுங்கத்தானே செய்கிறது!’ என்பது அபாரமான சொல்லாட்சி.