வாழ்தமிழ்- கடிதம்

அன்பின் ஜெயமோகன் ,
வணக்கம். நலமா?

அநேகமாய் உங்கள் தி இந்து கட்டுரையைக் (ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?) கண்டு, புளகாங்கிதத்தில் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருப்பார் என்று நினைக்கிறேன்.

நீங்கள் பதிவில் இட்டிருந்த இணைப்புகளின் வழியே (என் கோட்டித்தன வழக்கப்படி) குடைந்து பார்த்ததில் இந்தப் பக்கம் கிட்டியது.

http://ulikininpin1.blogspot.sg/

மனிதர் அவரே அருளி இருக்கிறார்.

“தமில் மொலியில் உல்ல சிரப்பு எலுத்தய் எல்லாம் னீக்கிவிட்டாலும், தமில் மொலி னன்ராகவே செயல்படும். அவ்வாரு சிரப்பு எலுத்து னீக்கப்பட்ட மொலியய் ‘தமிலு’ என்ரு சொல்லலாம் (‘தெலுகு’, ‘தெலுங்கு’ என்பது போல்).

உலகோர் அனய்வரும் அவரவர் பேச்சு மொலியிலுல்ல பொது எலுத்தய் மட்டுமே கொன்டு, பொருல் குலப்பம் இல்லாது, மிகமிகச் சுலபமான முரய்யில் ‘தமிலு’வில் பேசவும் எலுதவும் வேன்டும், சிரப்பு எலுத்தினால் தடுமாட்ரம் ஏர்ப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் ‘உலகப் பொது எலுத்து பொது மொலி’ என்னும் கட்டுரய்யின் னேரிய னோக்கமாகும்.”

கலக்கும் வயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, மேற்படி கட்டுரையான ‘உலகப் பொது எலுத்து பொது மொலி’ எங்கே என்று வெறி கொண்டு தேடிக் கொண்டுள்ளேன் :
கிடைத்தால் மறக்காமல் உங்களுக்கு அந்த இணைப்பை அனுப்பி இம்சிக்க உத்தேசம் :)

தமிழ் விக்கிபீடியாவில் ஏற்கனவே சிலர் வெந்து தணிந்து இருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது.
http://ta.wikipedia.org/s/1b09

– சந்திர மோகன்

முந்தைய கட்டுரைநேரு x பட்டேல் விவாதம்
அடுத்த கட்டுரைசிகிழ்ச்சை சரியா?