தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது- 6

அன்புள்ள ஜெய,

வாசிப்பின் ஆரம்பத்தில் இருக்கும் என்னைப்போன்றவர்கள் உங்கள் வலைத்தளத்தை தொடர்வதன் மூலம்
தான் பூமணி தேவதேவன் ஆகியோர் அறிமுகம். இந்த வருட விஷ்ணுபுர விருது அறிவிப்பின் மூலம் தான் எழுத்தாளர் ‘தெளிவத்தை ஜோசப்’ அவர்களின் பெயர் தெரிகிறேன். நீங்கள் குறிப்பிட்ட அவரின் நூல்களை வாசிக்க முயல்கிறேன்.

ஹாரூன்
சிங்கப்பூர்

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம். தெளிவத்தை ஜோசப் அவர்களை நீங்கள் விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுத்திருப்பது நல்ல தேர்வு என்பதே என் எண்ணம். மகிழ்ச்சியாக உள்ளது. ஜோசப் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு திண்ணை இணைய இதழில் ‘எனக்குப் பிடித்த கதைகள்’ தொடரை நான் எழுதி வந்தபோது, ஜோசப் அவர்களுடைய ’மீன்கள்’ கதையைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். சிறுகதை இலக்கிய வரலாற்றில் இடம்பெறக்கூடிய சிறுகதை அது. கட்டுரையின் சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன்.

http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60307244&format=html

அன்புடன்
பாவண்ணன்

அன்புள்ள பாவண்ணன்

அந்தக்கட்டுரையை நான் இந்த தளத்திலும் வெளியிடுவதாக உள்ளேன். தெளிவத்தையின் சிறுகதைகளின் தொகுதியில் இடம்பெறுவதற்காகவும் எடுத்துக்கொடுத்திருக்கிறேன். தெளிவத்தையின் மீன்கள் நான் 100 தமிழ்ச்சிறுகதைகள் என போட்டுள்ள பட்டியலிலும் இடம்பெறுள்ளது

ஜெ

ஜெ,

தெளிவத்தை ஜோசப் என்ற பேரையே இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அவரது மீன்கள் கதையை வாசித்தபோது ஒரு பெரிய எழுத்தாளரின் எழுத்தை உணரமுடிகிறது. அவருக்கு விருது அளிப்பதன்மூலம் நாம் நம்மை கௌரவப்படுத்திக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்

செல்வகுமார்

முந்தைய கட்டுரைஅழிவின்மையின் முத்துக்கள்
அடுத்த கட்டுரைகடவுள் எழுக! ஜெயமோகனின் 8 நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை