மங்கள்யான்- கடிதங்கள்

சமீபத்தில், பிபன் சந்திராவின் “விடுதலைக்குப் பின்னான இந்தியாவின் வரலாறு” படித்துக் கொண்டிருக்கிறேன்.

காங்கிரஸ் இடதுசாரி நெடி அதிகம்.

குறிப்பாக, ராஜீவ் காந்திக்கு மிக அதிகமான இடம் கொடுக்கப் பட்டதாகத் தோன்றியது.

ஆனால், 91 மாற்றத்திற்கு முன்னோடி அவரின் அந்த 4 வருடங்கள் என்பது ஓரளவு உண்மையே.

6 தொழில்நுட்ப மிஷன்கள் – குடிநீர், கல்வி, தொலைத் தொடர்பு, மூன்றாம் வெண்மைப் புரட்சிக்கான முதலீடு, தாய் சேய் நல திட்டம், எண்ணெய் வித்துக்கள் என –

பஞ்சாய்த்து ராஜ் – க்கான உழைப்பு

அன்றைய அரசியல் பிரச்சினைக்கான தீர்வுகள் , கணினி தொழில்நுட்பத்துக்கு ஆதரவு
என ஒரு இளைஞனுக்கே உரிய அதீத உற்சாகத்துடன் செயல்பட்டிருக்கிறார். ஒரு தேசத்துக்கான கட்டுமானங்களை ஒரளவு முழுமை நோக்கோடு யோசித்திருக்கிறார்.

அதை நிறைவேற்றும் அரசியல் முதிர்ச்சியும், பொறுமையும் இல்லாமல் போனது போல் தோன்றுகிறது.
91 க்கு பின் தாரளமயமாக்கம் ஒரு அலையாக எல்லாவறையும் அடித்துக் கொண்டு போய் விட்டது.

ராஜீவ் இல்லையேல் ஸாம் பிட்ரோடா இல்லை. நரசிம்ம ராவ் இல்லையேல் மன்மோகன் இல்லை. வாஜ்பேயி இல்லையேல் கண்டூரி இல்லை.ராஜீவ் பிரதமரான காலத்தை, அன்றைய இளைஞனாக நான் ஒரு தொழில்நுட்ப மாற்றத்துக்கான காலமாகக் கண்டதை நினைவுறுகிறேன்.

பாலா

முந்தைய கட்டுரைதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-2
அடுத்த கட்டுரை’மீன்கள்’ தெளிவத்தை ஜோசப்