வெள்ளைமலை, கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

வீட்டுக்குச் சென்று சேர்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். மனைவி குழந்தைகளுக்கு என் அன்பு

வெள்ளைமலைக்குச் சென்றதைப்பற்றிய உங்கள் குறிப்புகளை வாசித்தேன். மெல்வில்லுக்கு மனப்படிமமாக இருந்தது மசாசுசெட்ஸில் உள்ள கிரேலாக் என்ற மலைதான் என நினைக்கிறேன், வெள்ளைமலை அல்ல. அது எங்கள் வீட்டில் இருந்து ஒன்றரை மணிநேர சாலை பயணதூரத்தில் உள்ளது.  சென்ற மாதம் அங்கே சென்றபோது ஒரு படம் எடுத்தேன். அதன் முதுகு மூழ்கிய திமிங்கலம்போலவே இருப்பதைக் காணலாம்

ஒப்லா விஸ்வேஷ்

 

 

அன்புள்ள விஸ்வேஷ்
நலமாக இருக்கிறேன்

ஒருவகையில் இதெல்லாம் ஊகங்கள். மெல்வில் மனதை ஆக்ரமித்த மலை எது என அவர் எழுதினால்தான் உண்டு. ஆனால் இந்தமலை திமிங்கலம் போலத்தான் இருக்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தி கடிதங்கள்
அடுத்த கட்டுரைநாடார்,நாயர்,மிஷனரிகள்…