’சீர்மை’ மகத்தான அறிமுகம் -கடிதங்கள்

ஜெ,

தமிழிலக்கியத்தில் தலைமுறைக்கு ஒருவரோ இருவரோ ஜீனியஸ்கள் வருகிறார்கள். அவர்கள் வரும்போதே தெரிந்துவிடுகிறது. அவர்கள் அறிமுகமாகும்போதே நிறைய தாண்டிவந்திருக்கிறார்கள் என்று தெரியும் என்று நினைக்கிறேன். அவர்கள் முதிர்ச்சி அடைந்தவர்களாகத்தான் தெரியவருவார்கள். அப்படி ஓர் அறிமுகம் அரவிந்த். சீர்மை தமிழில் இந்த நூறுவருடத்தில் எழுதப்பட்ட அற்புதமான பத்துப்பதினைந்து கதைகளில் ஒன்று. அறிமுக எழுத்தாளர் என்று சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை முதல் பகுதிதான் வந்திருக்கிறது. முழுசாக படிக்கவுமில்லை. என்றாலும் உடனடியாக எழுதவேணுமென்று தோன்றியது. ஒரு மகத்தான அறிமுகம்

சிவராம்

***

ஜெயமோகன்,

ஒரே மாதிரி வேலையை திரும்பத் திரும்ப சந்தம் மாறாது செய்யும் போது எங்கோவொரு வாசல் நம்மில் திறக்கிறது. ‘அது அழிவற்றது’ என நம்மை உணரச் செய்கிறது. அல்லது ‘அவ்வளவுதான் அது’ என்று. ஒருகை ஓசையைக் கேட்டுப் பயணி ஒருவன் விழித்தெழுவது போல்”

ஒரு அறிமுக எழுத்தாளரின் கதையின் ஒரு வரி. அற்புதம்!

எழுதவருபவர்கள் எல்லாம் அரசியலையும் சமூகப்பிரச்சினைகளையும் மட்டும்தான் எழுதுவார்கள். தலைமுறைக்கு ஒருவர் இரண்டுபேர்தான் அதைத்தாண்டி holistic ஆக எழுதுவார்கள். இவர் அப்படிப்பட்ட ஒருவர்

வணக்கம் ஜெ. அற்புதமான அறிமுகம்

மதன்

முந்தைய கட்டுரைநீர்க்கோடுகள், அழைத்தவன், நூலகத்தில் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைசீர்மை (3) – அரவிந்த்