குழுமநண்பரான பாலா எழுதியிருக்கும் இக்கட்டுரை நிர்வாகவியல் சார்ந்த கட்டுரைகளை வாசிக்க விரும்பாத எனக்கு ஒரு பெரிய திறப்பு. பலகோணங்களில். பொதுவாக சேவையை அபூர்வமாக ஆக்குவதன் மூலம் அதன் செலவை அதிகரித்து இலாபம் ஈட்டுவதே வணிகநிறுவனங்களின் வழக்கம். நேர் மாறாக மிக அதிகமான மக்களுக்கு தரமானசேவை அளிப்பதன் மூலம் மிக அதிக லாபம் ஈட்டமுடியும் என்ற ஒற்றைவரியில் இருந்து பல தளங்களுக்கு நகர்கிறது இது.
கட்டுரை விரிவடையும்போது வளர்தல்