பரிசுத்தவான்கள் – ஒரு விவாதம்

Hi Jeyamohan Sir,

I am an average reader of your blog. I read almost every one of your posts. I have read and liked almost all of the short stories by upcoming authors. When I read Parisuthavangal by Gatchan, I couldn’t help but feel a sense of anger. First of all, the language was difficult to understand. I don’t have any problems reading your Malayalam-Tamil mixed Tamil. I actually like it a lot. But this story was very difficult to read. Sometimes I was not sure if the author made a spelling mistake or if that was actually a word. I managed to read the story till the end and the author has, like other authors like him before, concluded the story in a way that requires the reader to come to their own conclusion. I didn’t know what the author was trying to tell me. If the language was easy, I would have spent some time thinking about the story and the conclusion. Since it was difficult to understand the story in the first place, the conclusion just made me angry. “Just enna thaan solla vararu?”

I had a similar experience when reading Haran Prasanna’s short story too from the new authors series. The language was easy to understand, but the ending felt sort of left hanging. Why can’t they tell us just plainly what they want to tell us? If I want to come to another conclusion or think about a reason for that particular ending, I will do that. I didn’t have this problem with Appavin Kural. In that story too, a lot was left unsaid or left to reader’s imagination, but it was easy to understand.

Thought of writing you this letter even before Gatchan’s story was published, just after Haran Prasanna’s story was published, but then thought you were going to say “everybody understands the stories to the best of their ability.” Just feeling too tired of reading average stories that pretend to have deeper meanings. But I will continue to read just to come across that one good one.

Best wishes,
Sujata S

அன்புள்ள சுஜாதா,

நீங்கள் சொல்வதில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது. காட்சனின் அந்தக்கதை பொதுப்புரிதலில் இருந்து இரண்டு வகைகளில் தன்னை விலக்கிக்கொள்கிறது. ஒன்று அதன் மிகத் தனிப்பட்ட வட்டார மொழிநடை. இன்னொன்று அதன் சமூக-மதச் சூழலின் யதார்த்தம்.

வட்டாரமொழிநடை என்பது வாசகனுக்கு அக்கதை இந்த வட்டாரத்தைச் சார்ந்தது என உணர்த்தவும், வாசகன் அங்கே சென்று வாழும் உணர்வை உருவாக்கவும் மட்டுமே கையாளப்படவேண்டும். அதாவது அது ’சரியாக ஆவணப்படுத்துதல்’ அல்ல. ’கற்பனையைத்தூண்டுதல்’ மட்டுமே அதன் நோக்கம். அந்த எல்லைக்குள் மட்டுமே வட்டார வழக்கு கையாளப்படவேண்டும்.

அதேபோல சமூக-மத யதார்த்தங்கள் கதைக்குள் அவற்றைப்பற்றி ஏதும் அறியாத வாசகன் உள்வாங்கிக்கொள்ளும் அளவுக்கு சொல்லப்பட்டிருக்கவேண்டும்.

ஆனால் உலக அளவிலேயே கூட பேரிலக்கியப்படைப்புகளே இந்த கறாரான எல்லைக்குள் நிற்பதில்லை. அந்நிலையில் ஓர் இளம் எழுத்தாளரிடம் நாம் அதை நிபந்தனையாக வைக்க முடியாது. அவர் அறிந்த ஓர் வாழ்க்கையை நேர்மையாக முன்வைக்க முயல்கிறார். அதுவே போதுமானது.

அவர் இப்போதுதான் ஓர் உரையாடலை ஆரம்பித்திருக்கிறார். முன்னால் இருப்பவர்களின் எதிர்வினைகள் வழியாக தன் எல்லைகளையும் சாத்தியங்களையும் மெல்லமெல்ல உணர்ந்துகொள்வார். அவரது குரல் போகப்போக தெளிவும் தன்னம்பிக்கையும் கொண்டதாக ஆகும்.

அந்த நல்லெண்ணத்தை நாம் அவருக்கு அளிப்பதுதான் முறை. நமக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஐரோப்பிய ஆப்ரிக்க யதார்த்தங்களை புரிந்துகொள்ள அந்நூல்களை மிகுந்த சிரமம் எடுத்து வாசிக்கிறோம். அகராதிகளையும் கலைக்களஞ்சியங்களையும் புரட்டிப் பார்த்து உள்வாங்குகிறோம். விவாதித்து புரிந்துகொள்கிறோம். அந்த முயற்சியில் ஒருபகுதியை இந்தமாதிரி ஆக்கங்களுக்கு நாம் அளித்தாலே போதுமானது, இல்லையா?

ஏனென்றால் இந்தியா பன்மைத்துவமே அடையாளமாகக் கொண்ட நாடு. நம்மருகே வாழும் இன்னொரு சாதியினரின் மதத்தினரின் வாழ்க்கைமுறையும் நம்பிக்கைகளும் நம்மிடமிருந்து மிக மிக வேறுபட்டவையாக உள்ளன. பலருக்கு பக்கத்துவீட்டினரைப்பற்றியே ஒன்றும் தெரியாது. நாம் சிறு சிறு அறைகளில் வாழும் சமூகம்.

ஆகவே இங்கே இலக்கியத்தின் நோக்கம் கலையனுபவத்தை அளிப்பதும் ஆன்மீக மலர்வும் மட்டும் அல்ல, நாம் இயல்பாக அடைந்துள்ள திரைகளை விலக்கி சகமனிதர்களை புரிந்துகொள்வதும்கூடத்தான். இத்தகைய கதைகளின் நோக்கம் அதுவே.

இக்கதை நம் பொது இலக்கியச்சூழலில் அதிகம் அறியப்படாத கிறித்தவ நாடார் சமூகச்சூழலை, மதச்சூழலைப்பற்றி பேசுகிறது. ஹெப்ஸிபா ஜேசுதாசன் போன்ற சிலர் தவிர இவ்வுலகை எழுதிய எழுத்தாளர்களே நமக்கில்லை. அவ்வகையில் இது மிகுந்த முக்கியத்துவம் கொண்ட ஒரு வரவு.

மொழிநடையை கொஞ்சம் கவனித்துவாசித்தால் கதைக்குள் சென்றுவிட முடியும். கதை கிறித்தவர்களின் வெவ்வேறு சபைகளுக்குள் இருக்கும் நம்பிக்கை வேறுபாடுகளைப்பற்றி பேசுகிறது. நகைகளை அணியக்கூடாது என்ற கொள்கை கொண்ட ஒரு சபைக்குள் திருமணமாகிச் செல்லக்கூடிய ஒரு பெண் கொடுமைப்படுத்தப்பட்டு நகைகள் அகற்றப்படுகிறாள். அது அவளுக்கு பெரிய வதையாக இருக்கிறது.

என்ன துயரம் என்றால் மிக எளிதில் அவள் அதையே தன் வாழ்க்கையாக ஏற்றுக்கொள்ளவும் செய்கிறாள். அவளுக்கான குரலே இல்லை. பெண்களை இப்படி வைத்திருக்கும் ‘பரிசுத்தவான்கள்’ நாம் என்கிறது கதை – எளிமையாக இவ்வளவுதான்.

ஆனால் இரண்டாவது அடுக்கு உள்ளது. அது அந்நிகழ்ச்சியைப்பார்க்கும் பெண்கள், கருத்து தெரிவிக்கும், கொந்தளிக்கும் பெண்களால் ஆனது. அவர்களும் குரலற்றவர்களே.

இந்தக்கதையை முக்கியமான கலைப்படைப்பாக ஆக்குவது அதன் அமைப்பு. மொத்தக்கதையும் வீட்டைவிட்டு வெளியே போகாத ஒரு குடும்பப்பெண்ணின் வழியாக சொல்லப்படுகிறது. ஒரு பெரிய சமூகப்பிரச்சினை வீட்டுக்குள் கசிந்து வரும் வடிவில் மட்டுமே வெளிப்படுகிறது. அந்தப்பெண்ணின் தவிப்பும் ஆர்வமும் பதற்றமும்தான் இதை அழகிய கதையாக ஆக்குகிறது.

ஜெ

Sir,

Thank you for clarifying. Now I feel bad because I realize the author’s name is not Gatchan, but probably God Son. I was frustrated that I did not understand the language and hence did not understand the story. I did notice and understand the restlessness of the woman with the child who glimpses things happening around her and is eager to know more. See, I understood that even when the author was not saying it specifically. The story is beautiful wherever I can understand it. I will read it again.

I think this is a good opportunity to tell you the things I do to make my family members understand YOUR stories. I read Mathagam, loved it, so printed it out and sent it – by courier – to my father-in-law. He read it and dismissed it very easily because you “wrote it in Malayalam.” But he was nice enough to buy me Aram book the last time we came to India. On the last day my sister came to see us off and read the first story of the book which is of course Aram and had tears in her eyes because she thought it was about Saraswathi arul. See, even as I am writing this I am scared what if it IS about Saraswathi arul. Probably there was a story that I had explained to her was about saami and she thought I was a saami-story person. Then I explained the story to her as I understood it. “Illa-illa, aachi thaan main.”

sujatha

முந்தைய கட்டுரைகதைகள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇளங்கோ மெய்யப்பன்