அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கட்கு,
உங்கள் தளத்தில் என் கதை (நேற்று அவள் இருந்தாள்) ஒன்று வெளிவந்து இருக்கிறது என்று நண்பர்கள் சொன்னார்கள். சந்தோஷமாக சென்று பார்த்தேன். ” “தனுஜா ரங்கநாத்” என்ற பெயரில் இருந்தது. யாரோ ஒருவர் தவறாக தன்னுடையது என்று அனுப்பியிருக்கிறார் என்று நினைக்கிறேன். உங்கள் தளத்தில் என் கதை வந்தது பெருமையே. ஆனால் இன்னொருவர் பெயரில் வந்தது வலிக்கிறது.
என் கதையின் மூலத்தை என் தளத்திலேயே காணலாம்.
http://www.padalay.com/2013/05/blog-post.html
அன்புடன்,
ஜேகே.
www.padalay.com
https://www.facebook.com/jeyakumaran
அன்புள்ள ஜேகே
மன்னிக்கவும் [email protected] என்ற மின்னஞ்சலில் இருந்து இக்கதை அனுப்பப்பட்டது. ஒரு மோசடி என அறிந்தது வருத்தமளிக்கிறது.
இதைச்செய்தவர் இதன்மூலம் புத்திசாலி என்று தன்னை நிரூபிக்க முயல்கிறாரா அல்லது அசடு என நிரூபித்துக்கொண்டிருக்கிறாரா என்பதுதான் குழப்பமாக இருக்கிறது
ஜெ