தன்னைப்பற்றி
பெயர்: அரவிந்த் கருணாகரன்
சொந்த ஊர்: நல்லிபாளையம், நாமக்கல் மாவட்டம்.
பள்ளி, கல்லூரியில் படித்தது எல்லாம் சென்னையில். பிறகு கணிப்பொறித்துறையில் சில ஆண்டுகள் வேலை பார்த்தேன். இப்போது மேற்படிப்பிற்காக பாஸ்டனில்.
இளங்கலை முடிக்கும் வரை சினிமா, கிரிக்கெட் தவிர வேறெதிலும் பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. வேலைக்கு போக ஆரம்பித்த பிறகே படிக்க ஆரம்பித்தேன். என் மாமா (பாலா) மற்றும் அக்கா (விஜி) நல்ல வாசகர்கள். அவர்கள் எனக்கு நிறைய எழுத்தாளர்களை, புத்தகங்களை அறிமுகம் செய்தார்கள். அதிலிருந்தே வாசிப்பு குறித்த ஆர்வம் உருவானது. பிறகு ஜெ. மற்றும் நண்பர்களுடைய அறிமுகம் கதைகள் எழுதுவதற்கான உந்துதலை அளித்தது.