குழும நண்பர் ஸ்ரீனிவாசன் (சுருக்கமாக கவர்னர் சீனு) அமைதியாக ஒரு நல்ல பணியைச் செய்து வருகிறார். அவர் நடத்தி வரும் குருநித்யா வலைத்தளத்தில் ஸ்ரீநாராயண குருவின் ஆத்மோபதேச சதகத்திற்கு விளக்கவுரையாக ஸ்ரீநித்யசைதன்ய யதி எழுதிய நூலான ‘That Alone, the Core of Wisdom’ என்ற ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். இப்போது மலையாளம் கற்று, மலையாளத்திலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்க்கத் துவங்கியுள்ளார். இன்று வெளியிட்டிருக்கும் ‘அறம்’ கட்டுரை மலையாளத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.
காந்தி டுடே, விஷ்ணுபுரம்.காமை தொடர்ந்து இந்தக் குழுமத்திலிருந்து வந்துள்ள நல்ல தளம் குருநித்யா வலைத்தளம். வாழ்த்துக்களும், நன்றிகளும் ஸ்ரீனிவாசன்
பிரகாஷ் சங்கரன்