திருப்பூரில்…

அறம் அறக்கட்டளை, திருப்பூர் சார்பில் நடைபெறும் சுதந்திர தினத் திருவிழாவில் பேசவிருக்கிறேன்

ஆகஸ்ட் 15, காலை 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை சுதந்திர தின திருவிழா- இடைவெளியின்றி- திருப்பூரில் கொண்டாடப்படுகிறது. பேரணி, கண்காட்சி, கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகளுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம் ஹார்வி திருமண அரங்கு, திருப்பூர்

சமூகத்திற்கு அர்ப்பண மனோபாவத்துடன் பணிபுரியும் 6 பேர் இவ்விழாவில் ‘அறச்செம்மல்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.இவ்விருது பெறுவோரில் எழுத்தாளரும், காந்தி இன்று இணையதள் நிர்வாகியுமான திரு. சுனில்கிருஷ்ணனும் ஒருவர். கருத்தரங்கில் முன்னாள் எம்.பி திருச்சி சிவா, நீலகண்டன் அரவிந்தன் ஆகியோர் பேசுகிறார்கள்.

மாலை 6 மணிக்கு நிறைவு விழா அரங்கில் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணனும் நானும் பேசுகிறோம்.

நான் காலையில் திருப்பூர் வருவேன். நண்பர்களுடன் உரையாடும்படியாக நான் தங்க ஒரு பண்ணைவீடு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது

தொடர்புக்கு 9443704858, 9894031101

முந்தைய கட்டுரைமீண்டும் புதியவர்களின் கதைகள்
அடுத்த கட்டுரைஅறம் கடிதங்கள்