ஊடக இல்லம்,அறிவிப்பு

பிரான்சில் ஊடக இல்லம் திறந்து வைப்பு

பிரான்சில் இன்று 02.09.2009 புதன்கிழமை ஊடக இல்லம் (Maison des Media – Media House) திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரான்சின் பிரபல வர்த்தகர் திரு. மதி அவர்களால் ஊடக இல்லம் இன்று மாலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஊடக இல்லம் தமிழர்களின் நிகழ்கால வாழ்க்கை மற்றும் வரலாற்றை ஆவணமாக்கல், பகிர்ந்து கொள்ளல், தமிழ்ச் செய்தியாளர்கள், படப்பிடிப்பாளர்களை (நிழற்படம் மற்றும் வீடியோ) இணைத்தல். அவர்களது பாதுகாப்பு மற்றும் ஊடக உரிமைகள், சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக குரல் கொடுப்பதுடன், ஊடகவியலாளர்கள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள், அச்சுறுத்தல்களுக்கு எதிராகக்குரல் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

அத்துடன், பிரெஞ்சு மற்றும் அனைத்துலக செய்தியாளர்களுடனும் உறவுகளை உருவாக்குதல் (கூட்டுறவு, நட்பு மற்றும் ஒத்துழைப்பு). அதேவேளை, தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக பிரெஞ்சு மற்றும் அனைத்துலக தொடர்புசாதனங்கள் மூலம் குரல்கொடுத்தல்

 

ஊடகம் சார்ந்த உறுப்பினர்களுக்கு ஊடகவியல் சார்ந்த விசேட பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்கு செய்தல். புதிய இளம் ஊடகவியலாளர்களை உருவாக்குதல். ஊடகவியலாளர்களை ஊக்குவித்தலும், அதற்கான கட்டமைப்புக்கு உதவுதல் போன்ற பல்வேறு பணிகளை ஆற்றும் நோக்குடன் இந்த ஊடக இல்லம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், பல்வேறு வெளியீடுகளையும், செய்தி தளங்களையும் இயக்குவதற்கும் வெளிக்கொண்டுவருவதற்கும் முடிவு செய்துள்ள ஊடக இல்லம், அதன் ஒரு முயற்சியாக ஈழமுரசு இதழையும் வெளிக்கொண்டுவரவுள்ளது. இதன் முதல் இதழ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ந்து வரும் நாட்களில் கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் வெளியிடவுள்ளது.

முந்தைய கட்டுரைசொல்வனம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைநான் கடவுள் ஏழாம் உலகம் : ஒரு விவாதம்