சாப்ளின் -கீட்டன்: ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

சார்லி சாப்ளின் பற்றிய உங்கள் கட்டுரையையும் அது தொடர்பான திரு. முரளியின் கடிதத்தையும் படித்தேன். பஸ்ட்டர் கீட்டன் அற்புதமான நடிகர். இவ்விருவரின் தளங்களும் வேறு. எப்படி ரித்விக் கதக்குக்கும் சத்யஜித் ராய்க்கும் எதிரும் புதிருமான தனித் தனி ரசிகர் குழுக்கள் உண்டோ அப்படி இவ்விருவருக்கும் உண்டு. கீட்டன் தான் உயர்த்தி என்று சாப்ளின் படங்களை புறக்கணிக்கும் தீவிர கீட்டன் ரசிகர்கள் உண்டு.

சாப்ளினின் மறக்கமுடியாத பின்னாள் திரைப்படமான ‘லைம்லைட் ‘ இல் ப்ஸ்ட்டர் கீட்டன் நடித்திருக்கிறார்.

இன்னொரு முக்கியமான, அற்புதமான ஆனால் புறக்கணிக்கப்பட்ட ஐரோப்பிய நகைச்சுவை நடிகர் ழாக் தாத்தி (Jacques Tati). பிரென்ச் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்.
http://www.imdb.com/name/nm0004244/
இவரின் திரைப்படங்களை நீங்கள் ஏற்கெனவே கண்டு ரசித்திருக்கலாம். இவரைப்பற்றி இங்கு நான் குறிப்பிடவேண்டியது அவசியம். தற்போது உலகம் முழுவதும் இவரது திரைப்படங்கள் மறுவாசிப்பு செய்யப்படுகின்றன. இவரது முக்கிய திரைப்ப்டங்களான Mr. Hulot’s Holiday , Mon oncle, Play Time ஆகியவை தற்போது நம்மூர் .டிவிடி கடைகளில் கிடைப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

அன்புடன்

ஆனந்த்.
http://konangalfilmsociety.blogspot.com/

சாப்ளின் பழைய கட்டுரைகள்

இரு கடிதங்கள்

சாப்ளின் – ஒருகடிதம்

சாப்ளின்

முந்தைய கட்டுரைகாலச்சுவடு நூறாவது இதழ்
அடுத்த கட்டுரைசொல்புதிது பற்றி…