இயற்கை உணவு ஒரு கடிதம்

 

 அன்புள்ள ஜெயமோகன்

நலம்தானே? இயற்கை உணவு பற்றிய உங்கள் கட்டுரையை படித்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். இதுவரை இயற்கை உணவு சாப்பிடுவது பற்றிய ஒரு கட்டுரையைக் கூட நான் படித்தது இல்லை. எனக்கு தொடர்ச்சியாக வயிறு சம்பந்தமான பல சிக்கல்கள் வந்தன. அதிக எடையும் மூச்சுத்திணறலும் இருந்தது. எங்கோ கேள்விப்பட்ட நினைவில் நானே இயற்கை உணவுப்பழக்கத்துக்கு மாறினேன். இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை.

நாக்கை பழக்குவது பற்றி எழுதியிருந்தீர்கள். ஒரு மாதம் பல்லைக் கடித்துக் கொண்டு தாண்டிவிட்டால் போதும் . திரும்ப ஆரம்பிப்பதுதான் உண்மையில் கஷ்டமானது. இயற்கை உணவு என்ன செய்கிறதோ இல்லையோ வயிறையும் மூச்சையும் இயல்பாக இலகுவாக ஆக்கிவிடுகிறது. அது அளிக்கும் விடுதலை சாமானியமானது அல்ல

நீங்கள் சென்னையில் இயற்கை உணவு பற்றிய ஓட்டல் இருப்பதாக சொன்னீர்கள். அது எங்கே? இயற்கை உணவு குறித்த ராமகிருஷ்ணனின் நூல் எங்கே கிடைக்கும்?

ராமச்சந்திரன்

அன்புள்ள ராமச்சந்திரன்

இயற்கை உணவு பற்றிய ராமகிருஷ்ணனின் நூல் இப்போது மிகவும் பழையதாகிவிட்டது. மிக விரிவான பல நூல்கள் இப்போது கிடைக்கின்றன. சென்னையில் நியூ புக் லேன்ட்ஸ் போன்ற கடைகளில் பல நூல்களைக் காணலாம்.

ஒருமுறை இயக்குநர் வசந்த் என்னை அந்த ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். அதன் பின் போனது இல்லை. எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் ஒரு நண்பர் இந்த தகவலை அளித்திருக்கிறார்

அன்புடன்
ஜெயமோகன்

சோலையில் சஞ்சீவனம் <http://www.writerpara.net/?p=52>
http://www.writerpara.net/?p=52

முந்தைய கட்டுரைசுஜாதா, இருவம்புகள்
அடுத்த கட்டுரைமேலைத்தத்துவம் ஒரு விவாதம்