ஏற்காட்டில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்திய மூன்றுநாள் இலக்கிய முகாம் குறித்த புகைப்படங்கள் , பதிவுகள்.
//ஒவ்வொரு நாளும் காலை அமர்வுகள் ஒன்பதரை மணிக்குத் தொடங்கி மதியம் ஒன்றரை அல்லது இரண்டு மணி வரை கூட நீள்வதுண்டு. அதே போல தினந்தோறும் பிற்பகலில் இரு அமர்வுகள். மதியம் இரண்டரை மணி அல்லது 3 மணி முதல் 5 அல்லது ஆறு வரை ஒரு அமர்வு; பிறகு ஒரு மணி நேர மாலை நடை. [நடைப்பயணத்தின்போது ஜெயமோகனுடன் நிகழ்த்தும் உரையாடல்கள் மிக அற்புதமானவை; அரிதான இலக்கிய,வரலாற்று,தத்துவச் செய்திகள் ஒன்றன் பின் ஒன்றாக அவரிடமிருந்து கொட்டிக்கொண்டே இருக்கும் அந்தத் தருணத்தைதவற விட எவரும் விரும்புவதில்லை என்பதாலேயே நீண்ட நடைக்கும் எவரும் தயங்குவதில்லை;களைப்படைவதுமில்லை]
மாலை நடைக்குப் பின் இரவு 7 மணி முதல் 9 மணி அல்லது அதற்கு மேலும் கூட நீளும் அமர்வுகள். சற்றும் களைப்படையாத உற்சாகத்துடன்…..இன்னும் இன்னும் என்று ஆர்வத்தோடு உள்வாங்கிக்கொண்ட பங்கேற்பாளர்கள் என்று சலிப்புத்தட்டாத ஓட்டத்தோடு நடந்த இலக்கிய விவாதங்கள் இது போன்ற இலக்கியக்கூடுகைகளில் மட்டுமே சாத்தியமாகின்றன என்பதையும் கல்வி நிலையங்கள் நிதி நல்கைக்குழுவோடும் பிற வகைகளிலும் நடத்தும் கருத்தரங்குகளிலேயும் கூட இந்தச்சீர்மையைக் கண்டதில்லை என்பதையும் [ஒரு கல்வியாளராக இருந்த அனுபவத்தில்] மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்//