ஒரு முகம்

சொல்வனம் இணைய இதழில் சேதுபதி அருணாச்சலம் எழுதிய இந்ந்த கட்டுரை என் மனதை பெரிதும் பாதித்தது. ஏனென்றால் இந்தப் புகைபப்டம் வெளிவந்த அந்த நேஷானல் ஜியாக்ரஃபிக் இதழையே நான் பார்த்திருக்கிறேன். 1985ல் கண்ணனூர் காந்தி நினைவு நூலகத்தில். அந்தப்பெண்ணின் கண்களில் உள்ள பயந்த பார்வை ஒரு காட்டு மான் எழுந்து ஓடுவதற்கு முன்ந்தைய கணம் என்று எனக்கு அப்போதே தோன்றியிருக்கிறது

பொதுவாக நான் பழைய புகைப்படங்களை பார்க்கையில் அந்த மனிதர்களின் வாழ்க்கையை எண்ணிக் கொள்வேன். அவர்கள் என்ன ஆகிறார்கள்? புகைப்படம் வழியாக ஒருமுகம் வரலாற்றின் பகுதியாக ஆகும்போது என்ன நடக்கிறது?  அந்த தசை அமைப்பு ஒரு சிலைபோல ஒருவகையான குறியீடாக ஆகிறது. அந்த முகத்துக்குப் பின்னால் உள்ள மனித ஆத்மா காலத்தில் கரைந்து செல்கிறது. அது மானுடத்தின் இன்றியமையாத விதி

சில வருடங்களுக்கு முன்பு மர்ஃபி ரேடியோவின் முகச்சின்னமாக தோற்றம் அளித்த ஆந்த கன்னத்தில் கைவைத்த குழந்தையின் பிற்கால தோற்றத்தை காட்டினார்கள். ஒரு வயதான பாட்டி. மானுட நாடகத்தின் பயங்கர வசீகரத்தை அப்போது கண்டேன்.

அத்தகைய எண்ணங்களை உருவாக்கிய நல்ல கட்டுரை இது

http://solvanam.com/?p=1958

முந்தைய கட்டுரைஅமெரிக்கா:கடிதங்கள்
அடுத்த கட்டுரைகன்னிநிலம் – நாவல் : 16