இன்றுமுதல் மூன்றுநாட்கள் ஏற்காட்டில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் சார்பில் நிகழ்த்தப்படும் இலக்கிய ஆய்வரங்கம் ஆரம்பிக்கிறது. ஏறத்தாழ எழுபதுபேர் கலந்துகொள்கிறார்கள். இம்முறை ஊட்டியில் நடத்தமுடியவில்லை. ஊட்டி குருகுலத்தில் ஆளில்லை. கட்டிடங்களும் பராமரிப்பில்லாமல் உள்ளன.
ஏற்காட்டில் ஒரே ஒரு பெரிய கட்டிடம்தான். அதில் ஐம்பதுபேர்தான் தங்கமுடியும். இருபதுபேர் தாக்குப்பிடிக்கவேண்டியதுதான். பெண்களுக்கும் முதியவர்களுக்கும் தனி இடம் பார்த்திருக்கிறோம். ஈரோடு நண்பர் விஜயராகவன் அமைப்பாளராகச் செயல்படுகிறார்.
எளியமுறையில் நிகழ்ச்சியைநடத்தவேண்டும், நிதியுதவி பெறக்கூடாது என்பது எங்கள் கொள்கை. ஆகவே இதை தனிப்பட்ட உழைப்பு மூலமும் பங்கேற்பாளர்கள் செலவைப்பகிர்தல் வழியாகவும் நடத்துகிறோம்.ஆகவே சந்திப்பு நிகழ்ச்சி பெரியதாக ஆகாமல் பார்க்கவேண்டியது எங்கள் கட்டாயமாக உள்ளது. இம்முறை அறிவிப்பு வெளியிட்ட அன்றே இடங்கள் நிறைந்துவிட்டன. கிட்டத்தட்ட இருபத்தைந்துபேருக்கு இடம் இல்லை என மறுக்கவேண்டியிருந்தது. நண்பர்கள் புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன்
ஜெ