அன்புள்ளா ஜெ,
முரளி குறித்து நீங்கள் எழுதிய அஞ்சலிக்கட்டுரை வாசித்து மனம் நெகிழ்ந்தேன். அதிகமாக மலையாளப் படங்கள் பார்க்கும் எனக்கு அவர் மிகவும் பிடித்த நடிகராக இருந்தார். அவரது நடிப்பை கிரீடம் வாத்ஸ்லயம் வளையம் போன்ற பல படங்களில் கண்டு வியந்திருக்கிறேன். ஆகாசதூது என்ற படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டிருக்கிறேன். நம்மை விட்டுப்பிரிந்த மகா கலைஞனுக்கு கண்ணீர் அஞ்சலி
வேலு சாமிநாதன்
சென்னை
[மொழியாக்கம்]
வடக்கு முகம் நாடக் நூலின் முன்னுரையில் முரளியைப் பற்றிய குறிப்பு இருக்கிறது என்று அவரிடம் சொன்னது நான் தான். சூரியா டிவியில் ஒரு பேட்டிக்காக வந்தவருடன் நடந்த தனி உரையாடலில் அதைச் சொல்ல நேர்ந்தது. அதை வாசித்தும் காட்டியிருந்தேன். அவர் இறங்கிச் செல்லும்போது கையோடு அந்த புத்தகத்தையும் வாங்கிப் போனார்.
சுகுமாரன்
அன்புள்ள ஜெ
முரளியைப்பற்றி நீங்கள் எழுதியதை வாசித்தேன். உண்மைதான். அவரது அருமையான குரல்தான் அவரது பலம். அதில் மிக நுட்பமான அலைகளை அவர் உருவாக்கினார்.தாழ்ந்த தொனியில் அவர் பேசும்போது உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு பேசும் பாவனை உருவாகும். அதுதான் வெங்கலம் போன்ற பல சினிமாக்களில் அவரது நடிப்பை மேலே கொண்டுசென்றது.
அவரது நடிப்பை கண்ணே மடங்குக போன்ற படங்களிலும் சிறப்பாக பார்க்கலாம்
சீனிவாசன்