பிரகாஷ் சங்கரன், சொந்த ஊர்- மதுரை மாவட்டம், சோழவந்தான், தென்கரை கிராமம். கடந்த ஐந்து வருடமாக முனைவர் பட்டத்திற்காக செக் குடியரசில், எச்.ஐ.வி -எய்ட்ஸ் நோய்சிகிச்சை குறித்த ஆய்வில் ஈடுபட்டுவருகிறேன்.
சொல்புதிது குழுமத்தில் இலக்கிய, தத்துவ, அறிவியல் உரையாடல்களில் பங்குகொண்டு எழுத ஆரம்பித்துப் பழகினேன். கடந்த இரண்டு வருடங்களாக இணையத்தில் எழுதுகிறேன். சொல்வனம் இதழில் கட்டுரைகள், கதைகள் பிரசுரமாகியுள்ளது. http://solvanam.com/?author=193
http://jyeshtan.blogspot.com என்பது என் வலைப்பக்கம். இதுவரை
ஞானலோலன், அன்னதாதா, உள்ளுறங்கும் அரவம், லீலை, இருப்பு, மயக்கம் – ஆறு சிறுகதைகள்
அன்னை – ஒரு குறுநாவல்
அறிவியல் கட்டுரைகள், பயணக்குறிப்பு, போன்றவை எழுதியுள்ளேன்.