தொலைதல் பற்றி…

அன்புள்ள ஹரன்

கதை வாசித்தேன். சிறப்பாக உள்ளது. அசோகமித்திரனின் உலகைச்சார்ந்த கதை. நேரடியான ,குறைவான சித்தரிப்பு வழியாகச் சொல்லப்படக்கூடியது. மிகையற்ற உணர்ச்சிகள். அதனூடாக ஒரு குடும்பச்சித்திரம்.

கதையின் மையம் சப்த கன்னிகைகள்தான். தொலைந்துபோனவன் கண்ட கன்னிகைகள் பற்றிய கனவு மெல்லிய புன்னகையுடன் கூடிய ஊகங்களை எழுப்புகிறது. அந்தக்கதைகளை அவன் ஏன் சொல்கிறான், அதற்கான அவனுடைய ‘டெம்ப்ளேட்’ என்ன என்பதுதான் கதையின் சுவாரசியம் இல்லையா?

எதைச் சேர்த்திருக்கலாம் என்றால் சிவபாஸ்கரனின் தோற்றத்தைக் கொஞ்சம் விவரித்து கதையில் நிறுவியிருக்கலாம் என்பதுதான். அசோகமித்திரன் பாணி கதைகளில் கதைமாந்தரை விவரிக்கும் வழக்கம் இல்லை. ஆனால் அவர் சராசரிக்கதாபாத்திரம் என்றால்தான் அது சரி. சற்று அசாதாரணத்துவமிருந்தால் அதைக் காட்சிப்படுத்துவதே நல்லது.

கதையை குறைந்தபட்ச தகவல்களுடன் சொல்லும்போதுள்ள சிக்கல் என்றால் கதை வெகுதூரத்துக்கு மனச்சித்திரங்கள் உருவாக்காத வெறும் சொற்றொடர்களாக நகரும் என்பதே. ஆரம்பத்திலேயே ஒரு மனச்சித்திரத்தை வலுவாக உருவாக்கும் கதைபோல இவ்வகை கதைகள் வாசகனை உள்ளே இழுக்காது. இந்தக்குறை உங்கள் கதையிலும் உள்ளது.

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்

ஜெ

கதைகள்

12. பயணம் . சிவேந்திரன் [email protected]

11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]

10. வேஷம் பிரகாஷ் சங்கரன் [email protected]>

9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]

8. சோபானம் ராம்

7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்

6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]

5. பீத்தோவனின் ஆவி வேதா

4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]

3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]

2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]

1. உறவு தனசேகர் [email protected]

முந்தைய கட்டுரைஅறம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉரை- கடிதங்கள்