சராசரி-கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,


சராசரிகளின் சாரம் வாசித்தேன்

இப்போது செக் குடியரசில் தற்காலிகமாக வேலை பார்க்கிறேன். சமீபத்தில் நான் நினைத்தது: ஒரு வெளிநாட்டவனுக்கு எல்லா ஐரோப்பிய நகரமும் ஒரே மாதிரியே தோன்றும்; ஒரு McD, KFC, shopping mall-ல் நுழைந்துவிட்டால், உலகத்தின் எல்லா மூலையும் ஒன்றுதான். இது ஒரு சலிப்பூட்டும் விஷயம் தான்.. ஆனாலும், புதிய ஒரு இடத்தில் தோன்றும் எல்லாத் தயக்கங்களும் இங்கே களையப்படுகின்றன.

இங்கே TV-ல் ஒரு பழைய சண்டைப்படம் பார்த்தேன்… படம் முழுவதும் மொழி எந்த இடத்திலும் தடையாக இல்லை…

வானவில்லுக்கு வெள்ளையடித்தது போல, 100 வருடங்களில் உலகமே ஒரே மாதிரி மாறிவிடும் என்று தோன்றுகிறது… சலிப்பான சௌகரியமான உலகம்.

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்,

ஆம்,

இந்த சராசரித்தனம் பலசமயம் வசதியாக, ஆச்சரியங்கள் இல்லாததனாலேயே ஆபத்துகள் இல்லாததாக இருப்பதைப் பயணங்களில் கண்டிருக்கிறேன்.

ஜெ

ஆசிரியருக்கு,

சராசரிகளின் சாரம் படித்தேன்.எல்லா மனிதருக்கும் சராசரி தேவைகள் உண்டு. மனிதர்களின் இனம், மொழி, மதம்,சாதி ,குடும்பம் எனும் எல்லா வகை வளையங்களை வரைந்தாலும் அந்த வளையங்கள் சந்திக்கும் பொது புள்ளிகள் உண்டு. கணிதத்தில் venn diagram எனும் கருத்தாக்கம் உண்டு.

நவீன அறிவியல் தகவல் தொகுப்புகள் இந்த பொதுப் புள்ளிகளைக் கண்டு கொண்டு அதைப் பெரிதாக்குகின்றன. பொதுப் புள்ளிகள் மெல்ல வளரும் பொழுது வேறுபடும் வளையங்கள் சுருங்குகின்றன.

வளரும் பொதுப்புள்ளிகளின் ஒரு பகுதிதான் நீங்கள் காணும் சாலைகள், சாலையில் உருவாக்கப்படும் கடைகள் என்று எண்ணுகின்றேன். மனிதன் பொதுமைப் படுத்தப்படுதல் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்றே நம்புகின்றேன்.

நான் என்னைப் போலவே இன்னொருவன் என நம்ப ஆரம்பிக்கும் பொழுதே ”
பெரியோர் என வியத்தலும் இலமே, சிறியோர் என இகழ்தலும் இலமே” எனும் இடத்தினை அடைய முடியும். அந்த இடம் மானுட சிக்கல்களை விடுவிக்க உதவும். இந்தப்பொதுமைப் படுத்துதல் அந்த இடம் நோக்கிச் செல்லப் பாதை அமைத்துத் தரும் என நம்புகின்றேன்.

நிர்மல்

அன்புள்ள நிர்மல்

சராசரி என்பதே நிர்வாகம் சார்ந்த ஒரு கருத்து. அதற்கு வெளியே அந்தக்கருத்துக்கு மதிப்பில்லை. மீறல், பிழை, சிதைவு, பிறழ்விலேயே படைப்பூக்கம் உள்ளது

இந்தபூமியும் பிரபஞ்சமும் அப்படி உருவானவை

ஜெ

முந்தைய கட்டுரைஉன்னதமாக்கல்
அடுத்த கட்டுரைகி.ரா