கதிர்காமம்- ஒரு பாடல்

எமது நாட்டுப் பக்திப்பாடல் ஒன்று.பிரான்ஸில் பிறந்து அங்கேயே வளரும் எனது தங்கை (அம்மாவின் தங்கையின் மகள்) எனக்கு புத்தாண்டுப்பரிசாக YouTube இல் பதிவேற்றி அனுப்பி வைத்த பாடல்.

http://www.youtube.com/watch?v=bzeIKxwJC24&feature=youtu.be

கதிர்காமம் மிகவும் புராதனமான முருகன் கோவில்.இலங்கையின் தூர தெற்கில் அமைந்துள்ளது.கிழக்கு மாகாணத்தின் முடிவில் உள்ள யால காட்டினையடுத்து அமைந்துள்ள இக்கோயில் மிகவும் சிறியது.கருவறையில் விக்கிரகம் எதுவும் இல்லை.ஒரு பெட்டி மாத்திரம் உண்டு.கப்புறாளைகள் எனப்படுவோர் வாயைத் துணியால் கட்டிப் பூசை செய்கிறார்கள்.இவர்கள் வேடுவர்களின் வழி வந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

முன்னைய காலப்பகுதியில் இலங்கையின் வடக்கில் உள்ள யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் யாத்திரிகர்கள் கிளிநொச்சி,முல்லைத்தீவு,திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களினூடாகப் பயணம் செய்வார்கள்.அவர்கள் பயணம் செய்யும் வழிகளில் உள்ள மற்றைய கோயில்களில் தொடர்ந்து யாத்திரிகர் இணைந்தவாறே இருப்பார்கள்.எனது தாத்தா சென்றிருக்கிறார்.இந்த வருடாந்தர கதிர்காம யாத்திரைக்கு அரசியல் முக்கியத்துவமும் உண்டு.இந்த யாத்திரையே இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தை இணைத்துச் செல்லும் ஒன்றாகும்.யுத்தத்தின் பின் இது இல்லாது போய்விட்டது.

ந.சிவேந்திரன்

முந்தைய கட்டுரைபுழுக்களும் சினிமாவும்
அடுத்த கட்டுரைஎழுத்தும் சமூகமாற்றமும்