தெய்வமிருகம்-கடிதம்

அன்புள்ள ஜெ,

தெய்வமிருகம் பதிவு இப்போதுதான் வாசிக்கிறேன். வாசித்து முடிக்கையில் கண்களில் என்னை அறியாது நீர் கோர்த்துக் கொண்டது. கண்ணீரின் காரணம் நீங்கள் அனுபவிக்க நேர்ந்த வலியா அல்லது உங்கள் தந்தை பற்றி எழுந்த உணர்ச்சிப் பெருக்கா அல்லது அற்புதம் போல் தேறி வந்த விஷயமா அல்லது அனைத்துமே காரணமா …. தெளிவாகச் சொல்ல முடியவில்லை.

http://www.jeyamohan.in/?p=832

அன்புடன்,
வள்ளியப்பன்

அன்புள்ள வள்ளியப்பன்

நன்றி

லோகி ஒருமுறை சொன்னார். அன்பைக் காண்பதும் அன்பின்மையைக் காண்பதும்தான் கண்ணீரை வரவழைக்கின்றன என்று.

அன்பின்மையைக் காணும் போதும் நாம் அன்பின் பிரம்மாண்டத்தையே காண்கிறோம். இலக்கியம் அன்பைப்பற்றி சொல்லும் ஒரு கலை என்று சிலசமயம் தோன்றுகிறது

ஜெ

முந்தைய கட்டுரைகவிதையெனும் தவளை
அடுத்த கட்டுரைபடைப்புகள் கடிதங்கள்