கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் ,
நான் கோவையை
சார்ந்த இயந்திரவியல் துறை சார்ந்த நிறுவனத்தில் வடிவமைப்புப் பொறியாளர்
(Design Engg Mechanical ). சில வாரங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவரின்
மூலம் தங்களது அறிமுகம்… வலைத்தளத்தில் யானை டாக்டர்,அனல் காற்று,பின்
சில கட்டுரைகள் எனப் படித்ததில்,எனக்குத் தற்போதுதான் (உண்மையான )இலக்கிய
அறிமுகம் ,என்பது சித்தமாகிறது….அடுத்தடுத்த நாட்களில் “இந்து ஞான
மரபின் ஆறு தரிசனங்கள்’, படித்து முடித்தேன் ….. என்னைப் போன்ற இளம்
வாசகனுக்குக் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது தங்கள் நடை, ஆயினும்
மிகவும் என்னை ஈர்க்கிறது ,இதற்கு முன்னர் பெரிய இலக்கிய அறிமுகம்
இல்லையென்றாலும்,அவ்வப்போது எஸ் .ராமகிருஷ்ணன் ,முன்னர் சுஜாதாவைத் தாண்டித்
தங்களிடம் வந்துள்ளேன்… யானை டாக்டர் என்னைத் தூங்கவிடாமல் செய்யதது,
எழுத்தாளர் ராஜு முருகனின் மேற்கோள்தான் என்னை யானை டாக்டரிடத்து
சேர்த்தது … பின்னர் ‘ஊமைச் செந்நாய்’, என்னை நானே மீட்டெடுக்க உதவியது
… தன்னை விட மெலியார் மேல் ஆதிக்கமென்பது இன்றைய அலுவலகங்கள் வரை
தொடர்கிறது என்பது திண்ணம் .. தங்களின் ஆகச்சிறந்த நாவலான விஷ்ணுபுரம்
வாங்கினேன் ,தாங்கள் வலைத்தளத்தில் குறிப்பிட்டது போலவே ஐம்பது பக்கங்கள்
தாண்டியதும் நாவல் என்னை ஆட்கொண்டு விட்டது …. சோனா நதியின் சிவப்புப்
பிரவாகத்தில் அடித்துச் செல்லபட்டவனானேன்….. நூறு பக்கங்களைத்
தாண்டியுள்ளேன்….. இன்னும் இருபது நாட்களுக்குள் படித்து முடிக்கத்
திட்டம் …. முடித்துவிட்டு நீண்ட பதில் எழுத ஆவல் …. நான் புத்தங்களை
விமரிசனப் பார்வையோடு படிக்குமளவு தேர்ந்தவனில்லை என்றாலும் போகிற போக்கில்
வாசகனை ஆட்கொள்வது என்னளவில் சிறந்த படைப்பே… பார்த்திபன் கனவும்
,துணைஎழுத்தும்,இதை செய்தனவென்றாலும், தங்களின் ஏதோ ஒன்று ,”மையத்தை
சுற்றும் அணுவாக” என் சித்தமெல்லாம் வியாபித்துள்ளது…..தாங்கள் ஏற்கனவே
கூறியுள்ளது போல தினமும் ஒருவர் விஷ்ணுபுரத்தைப் பற்றி எழுகிறார்கள் என்று
, இன்று நானாக இருக்க வேண்டி இக்கடிதம் ,தமிழில் என் முதற் கடிதம்
பிழைகள் பொறுத்தருள்க …..

பிரகாஷ்,
கோவை .

அன்புள்ள பிரகாஷ்

விஷ்ணுபுரத்தை முடித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஓர் ஆசிரியரின் உலகுக்குள் நுழைவது என்பது எப்போதும் முதலில் சில தடைகளும் தடைகளைத்தாண்டிய ஈர்ப்பும் கொண்டதாகவே இருக்கும். அந்தப்பயணம் ஒரு கட்டத்தில் எளிதாகும் . அப்போது நீங்கள் எழுத்தாளனுடன் ஒன்ற ஆரம்பிக்கிறீர்கள். அது நிகழ வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஇணையத்தின் வெறுப்பரசியல்
அடுத்த கட்டுரைகாடு, விஷ்ணுபுரம், வெறும்முள்-கடிதங்கள்