விஷ்ணுபுரம் உதவி

அன்பு ஜெ ,

விஷ்ணு புரம் வாங்கி 5 வருடம் முடிந்து பலமுறை 40/50 பக்கங்கள் படித்தும் அதற்கு பின் படிக்க முடியவில்லை. உங்கள் புலமையில் சந்தேகம் இல்லை, நான் அறியாமையில் இருக்கிறேன் தாங்கள் எனக்கு உதவ முடியுமா சங்க சித்திரங்கள் படித்து சுவைத்து பின் உங்களின் முக்கிய படைப்பு விஷ்ணு புரம் என் அறிந்து வாங்கிய புத்தகம் கேட்க நீண்ட நாட்களாக தயக்கம் எப்படி படிப்பது, விளக்க முடியுமா கேட்ட விதம் அல்லது விஷயம் தவறெனின் மன்னிக்கவும்

கிருஷ்ணா

***

அன்புள்ள கிருஷ்ணா

விஷ்ணுபுரம் போன்ற ஒருநாவல் சட்டென்று வாசிக்க ஆரம்பிக்கையில் ஒரு வகையான திகைப்பத் தரும் என்பதை புரிந்துகொள்கிறேன். வாசித்த இன்னொருவரிடம் கொஞ்சம் விவாதித்தால்கூட அந்த தடையை தாண்டிவிடலாம்

அதற்கான சாத்தியம் இல்லாதபோது அந்நாவல் பற்றிய விமர்சனங்கள், விவாதங்கள் கைகொடுக்கும். விஷ்ணுபுரம் காம் என்ற இணையதளத்தில் அந்நாவலைப்புரிந்துகொள்வதற்கான ஏராளமான கட்டுரைகளும் குறிப்புகளும் உள்ளன

ஜெ

முந்தைய கட்டுரைபிழை, குருதி-கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைகளை மீண்டும் வாசிப்பது…