தாராவியின் வளம்

அன்புள்ள ஜெ.

சமீபத்தில் படித்த புத்தகம் – ரஷ்மி பன்சல் மற்றும் தீபக் காந்தி எழுதியது. மும்பை தாராவியும் – அதன் வளமும் (??) திடீரென எம்பிஏக்கள் கண்களில் பட – வினோதமான புள்ளி விவரங்கள்..

நாம் அங்கு செல்ல வேண்டாம். சில மென்மையான
க(வி)தைகள். ‘வெண்தங்கம்’ – திருநெல்வேலி மனிதர் – பஞ்சு சுவாமி – சிறுவயதில் மும்பை வந்து – 40 வருடங்களாக..மிகவும் சுருக்கமாகவும் அடர்த்தியாகவும் சொல்லப்பட்டுள்ளது – தற்போது – ஐயப்பன் இட்லி ஸ்டால் – ஒரு நாளைக்கு 20,000 – நிஜம்தான் – இட்லி – எவர்சில்வர் அடுக்கில் எடுத்து செல்லும் ஒவ்வொருவரும் தினம் ரூ.400 வரை சம்பாத்தியம் – அற்புதமான நிகழ்வு. என் அம்மா, நண்பர்கள், தம்பி தங்கைகள், அவர்களின் புதல்வர்கள் என எல்லோரிடமும் காண்பிக்கிறேன்..

இது போல் குறைந்தது 20 நி(ஜங்கள்)கழ்வுகள் –

அவர்களை – உந்துவது எது – தாராவியில்
சூழல் – பொறுத்துக்கொள்ள வேண்டும் –
பிரைவசி அதிகம் கிடையாது – பொறுத்துக்கொள்ள வேண்டும் –
முன்னேற்றம் கூட சற்று மெதுவாகத்தான் –

ஒருவர் பொறை இருவர் நட்பு – பலரின் பொறை – வியக்கத்தக்க சூழல்.

‘less is more’ என்பதின் விசை இவ்வளவா? –

வாழ்வின் கடினங்களை கசப்பு ஏதுமின்றி, உற்சாகத்துடன் – விரிந்த கனவுகளுடன் – மலர்ந்த புன்னகையுடன் வரவேற்பது – அன்றாட செய்திகளிலிருந்து ஒரு மாறுதல் –

நேரம் கிடைப்பின் படித்துப் பாருங்கள்-

அன்புடன் முரளி

முந்தைய கட்டுரைபின் தொடரும் நிழலின் குரல்
அடுத்த கட்டுரைசோழநாட்டில் பௌத்தம்