சீனு ராமசாமியின் நீர்ப்பறவை திரைப்படம் கொரிய திரைப்பட விழாவுக்கு தேர்வாகியிருக்கிறது. பொதுப்பார்வைக்காக அல்லாமல் போட்டிப்பிரிவில் படம் திரையிடப்படுவது ஒரு முக்கியமான கௌரவம். சீனு ராமசாமிக்கு வாழ்த்துக்கள்
படம் இங்கே சாதாரண திரையரங்க ரசனைக்கு அப்பால் கவனிக்கப்பட்டு மதிப்பிடப்படவில்லை. இதேபோன்ற சர்வதேச அங்கீகாரங்கள் அதற்கு வழியமைத்தால் நல்லது