பஷீர்- கடிதம்

பஷீர் விக்கி

காலை மூன்று மணிக்கே எழுந்து தடக் தடக் என்று தரையை அதிர வைத்து, நாள் துவக்கும் மின் வண்டிகளின் ஊரில் இருக்கிறேன்.

நாயர்கள் மட்டுமல்ல – சில மசக் கவுண்டன்களும் புலி வாலைப் பிடித்து விட்டுப் படும் பாடுகளை எழுத ஒரு பஷீர் வேண்டும்.

ஏதேனும் ஒரு நாளில் புலியால் கடித்துண்ணப் பட்டு, எலும்புக் கூடாய்த் துப்பப்பட்ட பின்பும், சாய்வு நாற்காலியும், கட்டன் சாயாவுமே துணையாக, வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து விடலாம் என்னும் நம்பிக்கையைப் புன் சிரிப்போடு தருகிறது கட்டுரை.

நன்றி

பாலா

அன்புள்ள பாலா

பஷீரை சந்தித்த நாட்களை மீண்டும் இப்போது நினைவுகூர்கிறேன். நேற்றுவரை கேரளத்தில் இருந்தேன். சூரியநெல்லி வழக்கு பற்றிய செய்திகளாக ஓடிக்கொண்டிருந்தது டிவி. பஷீர் உருவாக்க எண்ணிய ஓர் உலகம்- அன்பினாலும் நகைச்சுவையினாலும் மட்டும் கடந்துபோக வேண்டிய எளிய வாழ்க்கை மட்டுமே உடைய ஓர் உலகம்- பற்றிய கனவு எனக்குள் நிறைந்தது.

ஜெ

அன்புள்ள ஜெ

பஷீரைப்பற்றிய கட்டுரை படித்தேன். பஷீரின் நகைச்சுவையையும் எளிமையான மானுட தரிசனத்தையும் பஷீர் பாணியிலேயே சொன்ன அற்புதமான கட்டுரை.

நன்றி

விஸ்வநாதன்

முந்தைய கட்டுரைகதைகள்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைபூரண மதுவிலக்கு