இரு கடல் பிரமோக்கள்

கடல் படத்துக்கு இரு ‘ஃப்ரீலான்ஸ் பிரமோ’ க்களைப்பார்த்தேன். பிரகதி குருப்பிரசாத் நெஞ்சுக்குள்ளே பாடலின் குரல் டிராக்கைத் தன் குரலால் நிரப்பிப் பாடி நடித்த படம் ஆச்சரியமாக கச்சிதமான படமாக்கல், நுட்பமான தொகுப்பு, கற்பனை நிறைந்த மௌனக்காட்சிகளுடன் சிறப்பாக இருந்தது

https://www.youtube.com/watch?v=HedptM7qpm8

அய்யப்ப பைஜூ யூடியூப் வழியாகவே பிரபலமானவர். இயற்பெயர் பிரசாந்த் புன்னப்ரா. அய்யப்ப பைஜூ என்ற குடிகார கதாபாத்திரத்தை அவர் உருவாக்கி இணையத்தில் உலவவிட்டார். பின் மேடைநிகழ்ச்சிகளில் பிரபலமானார். மிஸ்டர் சங்கீதன் என்ற பாடக கதாபாத்திரமும் முக்கியமானது. நான் அவரது நுட்பமான நடிப்புக்கு ரசிகன். அவர் நான் எழுதிய ஒழிமுறியிலும் நடித்திருந்தார்

பைஜுவின் இந்த ’கடல் பிரமோ’ வில் அவரது போதை நடிப்பில் வழக்கமான நுட்பங்கள். குடிகாரர்களின் மூளையில் விழும் இடைவெளிகள், பேசுவதற்கு முந்தைய நாக்குசுழற்றல், எச்சில்கோழையை துப்புதல் எல்லாமே நுணுக்கமாக உள்ளன. பைஜூ குடிப்பதில்லை

https://www.youtube.com/watch?v=no_oD8k9D8s மலையாளம்

https://www.youtube.com/watch?v=R1xj5lYhRVY தமிழ்

முந்தைய கட்டுரைகுகைகளின் முடிவில்
அடுத்த கட்டுரைபெரியார் விருதுகள்