நேற்று முழுக்க ஒரே மூச்சாகப் பயணம் செய்து ஏலூரு வந்துசேர்ந்தோம். அங்கே ராமச்சந்திர ஷர்மாவின் நண்பர் ஏற்பாடு செய்திருந்த அறையில் தங்கினோம். காலையில் எழுந்து மீண்டும் ஐநூறு கிலோமீட்டர் பயணம் செய்து சென்னை. சென்னையில் இருந்து ரயிலில் நாகர்கோயில்
இதுவரை மேற்கொண்ட பயணங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது இது. இதுவரை சென்ற பயணம் மண்மீது ஊர்தல். இது மண்ணுக்குக் கீழும் இருந்தது. பயண முடிவில் ஒரு தையல் ஊசிபோல நாங்கள் மண்ணை மேலும் கீழும் சென்று தைத்து மீண்டதாகத் தோன்றியது.
ஒவ்வொரு பயணம் முடியும்போதும் தோன்றுவதுதான், இன்னும் இப்படி எத்தனைப் பயணங்கள் சென்றால் இந்த மண்ணை அறிய முடியும்? அதற்கு எத்தனை ஆயுள் தேவை!