என் நூல்கள்

ஜெ

உங்கள் நூல்களில் பல கிடைக்கவில்லை என்பதை புத்தகக் கண்காட்சியில் கவனித்தேன். கிழக்குபதிப்பகத்தில் அவர்கள் வெளியிட்ட நூல்களையே இல்லை என்று சொன்னார்கள். சொல்புதிது என்று ஒரு பதிப்பகம் பார்த்தேன். அது நீங்கள் நடத்தும் பதிப்பகம? அங்கும் பல நூல்கள் இல்லை என்று சொன்னார்கள். நூல்கள் எங்கே கிடைக்கும்?

சரவணன் எம்.கே

***

அன்புள்ல சரவணன்,

ஒருவருடம் முன்பே என்னுடைய நூல்களை கிழக்கு பதிப்பகம் தொடர்ந்து வெளியிடக்கூடாது என்று சொல்லிவிட்டேன். அப்போது அச்சானவற்றில் விற்காமல் எஞ்சிய சில நூல்களை மட்டுமே கிழக்கு இப்போது விற்கிறது. அவையும் இந்த புத்தகக் கண்காட்சியுடன் முடிந்திருக்கும். அவற்றின் மறுபதிப்பை வேறு பதிப்பகங்கள் அடுத்தவருடத்திற்குள் கொண்டுவரக்கூடும். கவிதா பதிப்பகமும் என் நூல்களை மேலும் வெளியிடக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன்

சொல்புதிது என் பதிப்பகம் அல்ல. என் இளம் நண்பர் கடலூர் சீனுவுக்கு அவரது தந்தை இடத்தில் இருந்து நான் செய்யும் உதவி அது. அவர்தான் அதை தொழில்முறையாக நடத்தப்போகிறார். அவருக்கு உங்களைப்போன்றவர்களின் உதவி தேவை. அவர் ஒரு வணிகராக வெற்றிபெறுவதை, சமூகத்தில் ஓரு முக்கியமான இடத்தை அடைவதை காண விரும்புகிறேன்

என் நூல்களை தமிழினி, நற்றிணை ஆகியவை தொடர்ந்து வெளியிடும். வம்சி அறம் போன்ற நூல்களை வெளியிட்டுள்ளது. மேலும் நூல்களை வெளியிடும்.

ஜெ

முந்தைய கட்டுரைகுகைகளின் வழியே – 21
அடுத்த கட்டுரைகுகைகளின் வழியே – 22