தொடக்கம்

உயிர்மையில் நூல் வெளியீட்டுக்கூட்டத்தில் சிவகாமியின் நாவலைப்பற்றி உரையாற்றியபின் எட்டரை மணிக்கே அவசரமாகக் கிளம்பி ரயில்நிலையம் வந்தேன். நண்பர் சுப்ரமணியம் ரமேஷும் சுரேஷ்பாபுவும் காரில் கொண்டுவந்து செண்டிரல் ரயில் நிலையத்தில் விட்டார்கள். மைசூர் எக்ஸ்பிரஸ் இரவு ஒன்பதரை மணிக்கு. நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். ராஜமாணிக்கமும் அர்விந்தும் வந்தார்கள். நாங்கள் மூவரும் கிளம்பினோம்

ரயில் கிளம்பியதுமே தூக்கம். காலையில் பெங்களூர். ரயில்நிலையத்தில் சேலம் பிரசாத் வந்திருந்தார். ரவி, ஷிமோகா வந்து கூட்டிச்சென்றார். அவரது பெங்களூர் ஃப்ளாட்டில் கிருஷ்ணன், கார்த்திக் இருந்தார்கள். குளித்துத் தயாராகிக் காலை ஆறுமணிக்குக் கிளம்பிச்சென்றோம். சித்ரதுர்க்கா வழியாக ஆந்திராவுக்குள். இன்னொரு பயணத்தின், இன்னொரு பாரத தரிசனத்தின் தொடக்கம்

சென்னை செண்டிரலில் எடுத்த படங்கள்

சுப்ரமணியம் ரமேஷ், ராஜமாணிக்கம் அர்விந்த்
நானும் சுப்ரமணியம் ரமேஷும்
முந்தைய கட்டுரைமாபெரும் இயந்திரம்
அடுத்த கட்டுரைஇந்துக்கல்லூரி கருத்தரங்கு படங்கள்