அனைவருக்கும் வணக்கம்.
தமிழகம் முழுவதும் பல இடங்களில் கல்லூரி மாணவர்கள்,தமிழ் உணர்வாளர்கள்
எனப் பலருக்கும் தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் நண்பர்களுடன் இணைந்து பயிலரங்குகள் பல நடத்தியுள்ளேன்.
நாகர்கோயிலில் நடந்த பயிலரங்கின்பொழுது(20.06.09) ஒரிசா பாலு அவர்கள் ணையப்பயிலரங்கம் சார்பில் ஒரு குழு உருவாக்கி,உரையாடினால் பயிலரங்கம்
சார்ந்த முன்னேற்றமான செய்திகள் கிடைக்கும் என்றார்கள். உடன் தம்பி நிலவன் அவர்கள் அதற்கு வேண்டிய வேலைகளைத் தொடங்கினார்.
உண்மையான ஈடுபாடுடைய நண்பர்கள் தமிழ் இணையப்பயிலரங்கம் தொடர்பான சிறந்த
கருத்துகளை எங்களுக்கு உரைக்கலாம்.இயன்ற வகையில்
துணைநிற்கலாம்.தமிழகத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் ஏன் அயல்நாடுகளிலும் தமிழ் இணையத்தைப் பரவலாக்குவோம்.
வாருங்கள்! ஊர்கூடித் தமிழ் இணையத் தேர் இழுப்போம்!
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
தமிழ் இணையப் பயிலரங்கக் குழு விபரங்கள் :
குழுவின் பெயர் : தமிழ் இணையப் பயிலரங்கக் குழு
குழு வலைப்பக்கம் : http://groups.google.com/group/tamil-inaiya-payilarangam
குழு மின்னஞ்சல் முகவரி : [email protected]