மலையாள இதழ்கள், கடிதங்கள்

அன்புள்ள ஸ்ரீ ஜெயமோகன் சார்,வலைதள பிரச்சினை காரணமாக உடனடியாக உங்களுக்கு பதில் எழுதமுடியவில்லை.
 
உங்கள் விரிவான பதிலை பார்த்து மகிழ்ந்தேன்.   பிஸி ஆன நேரத்திலும்
என்னுடைய கேள்விக்கு மிக நிதானமாக patiently, அளித்த  socio/literary
commentary
எப்படி நன்றி சொல்றது என்று தெரியவில்லை.வாயனசால இப்போதும் கேரளாவில் அங்கும் இகும் ஆக நடந்து கொண்டு தன
இருக்கிறது.   அனால் புதிய தலைமுறைக்கு இலக்கிய ஆர்வம் குறைந்துவிட்டது
என்று தான் சொல்லவேண்டும்.  மலையாள இதழ்களின் தரம் குறைந்துவிட்டது என்ற நீங்கள் எழுதியது நூற்றுக்கு நூறு உண்மை. எண்பதுகளில் இருந்த தரம் கூடி
இப்ப இல்லை என்று தான் எனககு கூட பட்டது.  சமகாலிக மலையாளம், கலா கௌமுதி இரண்டும் அரசியல் கட்டுரைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கறது.
எண்பதுகளில்  நிதய் சைதன்ய யதியின் யாத்ரா, எம் டி யின் ரெண்டாமூழம்,
மாதவிகுட்ட்யின் நீர்மாதளம் பூத்தகாலம்,  மாதவனின் சில நல்ல கதைகள்
ஆகியவற்றை கலாகௌமுதியில் வந்து நான் படித்து ரசித்தவன். கடைசியா சாகித்ய வாரப்ஹலம் கலகௌமுதியில் வந்த போதும், மலையாளம் வாரிகையில் வந்த போதும் ஊருக்கு வரும்போதெல்லாம் வாசித்ததுண்டு.   இப்போது மீண்டும் மத்ருபுமி விரும்பி வாசிக்க துடங்கியிருக்கேன். நான் காலேஜில் படித்துகொண்டிருந்த பொது சு.ர வின் ஜெ ஜெசிலகுரிப்புகள் மாத்ருப்தூமியில் வந்தது நினைவில் இருக்கிறது.மலையாளத்தில் தரமான இணையத்தளம் இல்லை என்று நீங்கள் எழுதியது உண்மைதான். சிந்த, கணிக்கொன்ன  போன்ற ஒருசில இதழ்கள் தான் இருக்கிறது, அதன் தரம் சாதாரணமானதே என்று நினைக்கிறேன்.உங்களுடைய விரிவான பதிலை பார்த்தபோது என்ன எழுதறதென்று தெரியவில்லை.

 

 

 

 

 

 அன்புடன்

சீதாராம் நெல்லிசேரி

 

பிரியப்பட்ட நெல்லிச்சேரி

1983 முதல் 1989 வரை  நான் தொடர்ந்து கலாகௌமுதி வாசகன். எம் கிருஷ்ணன்நாயர் உலக இலக்கியம் பற்றி எழுதினார். எம்டியின் ரண்டாமூழம் வெளிவந்தது. என்.ஆர்.எஸ்.பாபு – எஸ். ஜெயச்சந்திரன் நாயர் ஆசிரியர்.  அப்போதுதான் மாத்ருபூமியில் ரவி வர்மா வங்காள நாவல்களை மொழியாக்கம் செய்து தள்ளிக்கொண்டே இருந்தார். கே.ஸி.நாராயணன், எம்.டி நாலப்பாட்டின் கீழே இதழாசிரியர். அது ஒரு பொற்காலம். வாரந்தோறும் வாசிக்க ஏதாவது வந்துகொண்டே இருந்தது.

அதேபோல எழுபதுகலில் கெ.பாலகிருஷ்ணனின் கேரளகௌமுதி வாரிக, காம்பிசேரி கருணாகரன் ஆசிரியர் ஆக இருந்த ஜனயுகம் வாரிக   வந்த காலக்ட்டம். தயாட்டு சங்கரன் ஆசிரியராக இருந்த தேசாபிமானியும் ஒரு பொற்கால நினைவே

அந்த ஊக்கத்தை அளிக்கும் எந்த இதழும் இப்போது இல்லை. இன்றைய மாத்ருபூமி ஏதோ முயல்கிறது. ஆனால் எங்கிருந்து எதை அள்ள என்றுதான் தெரியவில்லை

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைகேரள இதழ்கள்
அடுத்த கட்டுரைவரவுப்பெட்டி