சாய்நாத்தின் இந்தக் கட்டுரை, அமெரிக்க விவசாயிகளின் நிலையைக் காட்டுகிறது.
அங்கே நூறு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர் சிறு விவசாயி. விவசாய மானியம் பெறுபவர்கள் ராக்ஃபெல்லர் போன்ற பெரும் விவசாயிகள்.
அடிப்படை உணவுப் பொருட்கள் மலிவாகக் கிடைக்க வேண்டும். ஆனால், விவசாயம் லாபகரமான தொழிலாக இருக்க வேண்டும். catch-22.
எவ்வளவு inefficient ஆக இருந்தாலும் (ஒரு கிலோ அரிசியை விளைவிக்க ஜப்பானில் ஆகும் செலவு இந்தியாவை விட மிக அதிகம்), நாடுகள் தங்கள் food security ஐ outsource செய்ய மாட்டார்கள். எனவே மானியம்.
இந்தியாவில் 10 ஏக்கர் நிலம் வைத்திருப்பதைக் காட்டிலும், தனியார் நிறுவனத்தில் குமாஸ்தா வேலை செய்வது லாபகரமானது. பாதுகாப்பானது. வேறு வழியில்லாதவர்கள் மட்டுமே செய்யக் கூடிய தொழில் ஆகிவிட்டதில், தொழில் முனைப்பு குறைந்து போகிறது.
பெரும் துயரம்.
பாலா