நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது ‘ஜெயமோகனின் காடு நாவல் காமத்தைப் பற்றியது. முழுக்க முழுக்க மனிதனின் காதலைப் பற்றிப் பேசிய நாவலாக அவரது ஏழாம் உலகத்தைப் பார்க்கிறேன்’ எனச் சொன்னேன். உண்மையில் இதுதான் எனது அபிப்ராயம். அவரைச் சீண்டுவதற்காகச் சொன்ன வழக்கமான வார்த்தை என எடுத்துக்கொண்டு பயங்கரமாகச் சிரித்தார். நான் முகத்தை சீரியசாக வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு, ’சும்மா விளையாடாதப்பா, அப்பழுக்கற்ற குரூரம் வெளிப்பட்ட நாவலாகத்தான் எனக்கு ஏழாம் உலகம் தெரிந்தது’ எனச் சொன்னார்.
ஏழாம் உலகம் பற்றி இன்னொரு விமர்சனம்