கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஆரோக்கிய நிகேதனம் வாசித்தேன்.மகத்தான நாவல். என் சிறிய வாசிப்பு அனுபவத்தில் நான் வாசித்த
மிக அற்புதமான நாவல்.தஸ்தாவெய்ஸ்கியின் நாவல்களை விட.மிகப் பெரிய விஷயம்.கண்ணீரைப் பின்தொடர்தல் வாசித்திருக்காவிட்டால் இதை நான் வாசித்திருக்க வாய்ப்பில்லை.நன்றி.

சர்வோத்தமன்.

அன்புள்ள சர்வோத்தமன்

முப்பெரும் பானர்ஜிகள் [மாணிக், தாராசங்கர், விபூதிபூஷன்] இந்திய இலக்கியத்தின் சிகரங்கள். இமயமலை அடிவார கிராமங்களில் எந்தப்பக்கம் திரும்பினாலும் வெள்ளிமலைச் சிகரங்கள் தெரியும். சிகரங்களுக்கடியில் வாழ்கிறோம் என்ற பிரக்ஞை இருந்துகொண்டே இருக்கும். இந்திய இலக்கியத்தில் அவர்கள் சிகரங்கள்

ஜெ

அன்புள்ள ஜே.எம்,

நலம்தானே?

நான் உங்கள் கண்ணீரைப்பின்தொடர்தல் நூல் வழியாகத்தான் இந்திய இலக்கியங்களை அறிமுகம் செய்துகொண்டேன். நான் இதுவரை வாசித்த இந்தியநாவல்களில் அற்புதமான படைப்புகள் அந்தப்பட்டியலில் உள்ளவை. ஆரோக்கியநிகேதனம், சிக்கவீர ராஜேந்திரன், அக்னிநதி ஆகிய மூன்றையும் தலைசிறந்தவை என்று சொல்வேன்.

வனவாசி [மாணிக் பந்த்யோபாத்யாய] ஒரு நல்ல நாவல். உங்கள் பட்டியலில் அது இல்லையே ஏன்?

சிவராம்

அன்புள்ள சிவராம்

அந்த நூலில் ஒரு பங்கீட்டுமுறை இருக்கும். ஒருமொழிக்கு இவ்வளவு நாவல் என. வனவாசி பற்றி விரிவாகத் தனியாக எழுதியிருக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தியின் கண்கள்
அடுத்த கட்டுரைசிறுவணிகத்தில் வெளிமுதலீடு