கனி

எஸ்.வையாபுரிப்பிள்ளை

அன்புள்ள ஜெ,

நீங்கள் கூடங்குளம் கட்டுரையில் கனிவளம் என்று எழுதிவிட்டீர்கள், உங்களுக்கு தமிழே தெரியவில்லை என்று ஒரு நண்பர் எனக்கு சாட்டில் சொன்னார். கனிம வளம் என்று சொல்லவேண்டுமாம். உண்மையில் கனிவளம் என்று சொல்லலாமா?

ஜெ.எஸ்.

அன்புள்ள ஜெ.எஸ்,

தமிழில் திடீரென்று தமிழறிஞர்கள் பெருகி வருவது மகிழ்வளிக்கிறது. எங்கும் துணிந்து கருத்துச்சொல்ல முயலும் அவர்களின் தன்னம்பிக்கை கண்டிப்பாக பாராட்டுக்குரியது, அவர்கள் ஏதேனும் வாசிப்பார்கள் என்றால் மேலும் நல்லது.

எஸ்.வையாபுரிப்பிள்ளை அகராதிப்படி கனி என்ற சொல்லுக்கு பொன் முதலிய உலோகங்கள் எடுக்கும் சுரங்கம் [mine] என்று பொருள் உண்டு. ‘கரைகனிப் பொருளும்’ என திருக்காளத்திபுராணம் சொல்வதை வையாபுரிப்பிள்ளை மேற்கோள் காட்டுகிறார்

இணைய அகராதியிலேயே மினரல் என்ற சொல்லுக்கு கனி, கனிப்பொருள் என்று பொருள் கொடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

கனனம் செய்தல் என்றால் அகழ்வுசெய்தல் என்று பொருள். அதிலிருந்து வந்த சொல் கனி. கனிமம் என்பது அச்சொல்லில் இருந்து பெறப்பட்ட சொல். அது அகழ்வு செய்யப்பட்ட பொருள் என்ற அர்த்தம் உடையதாயினும் சொற்பொருளாக அகழ்வு செய்யப்படும் உலோகங்களையே சுட்டுகிறது.

கனிவளம் என்பது எல்லா நிலத்தடி செல்வங்களையும் குறிக்கும் சொல்.ஏராளமான தமிழறிஞர்களால் சாதாரணமாக பயன்படுத்தப்பட்ட ஒன்று.

ஜெ

முந்தைய கட்டுரைகூடங்குளம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஒழிமுறி- ஹிண்டு