நகைச்சுவை-கடிதங்கள்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.

மது:சில கலைச்சொற்கள்தலைப்பில் வந்துள்ள நகைச்சுவைக் கட்டுரையை படித்துச் சிரித்து கொண்டே இதை எழுதுகிறேன்.என்ன ஒரு தீர்க்கமான ஆராய்ச்சி!. “சகலவற்றையும் கரைத்துக் குடித்தவர்” போல் எழுதியுள்ளீர்கள்.படித்து சிரித்து சிரித்து வயிறு (அந்த எளவை எல்லாம் குடிக்காமலேயே) புண்ணாகிவிட்டது.அருமையான நகைச்சுவைக் கட்டுரை.

நன்றி
அன்புடன்
அ.சேஷகிரி,
ஆழ்வார்திருநகரி. .

***

ஜெயமோகன்,
வர வர உங்கள் எழுத்துக்கள் அலுவலகத்தில் இருந்து படிக்க இயலாத தரத்தில் உள்ளன. அதிலும் குறிப்பாகத் தங்களின் ‘நமது பக்திப்பாடல் மரபு– ஒரு வரலாற்று நோக்கு’ , ‘மது:சில கலைச்சொற்கள்’ என்ற இரு கட்டுரைகளையும் அலுவலகத்தில் நான் படித்தது, என் மேல் பலருக்கு பல சந்தேகங்களையும் கிளப்பிவிட்டுவிட்டது. அக்கட்டுரைகளைப் படித்து, அதனால் வரும் உண்ர்ச்சிகளை அடக்க முயற்சித்து, அதன் விளைவால் வெளிக்கிளம்பிய சில வினோத ஒலிகளால், தீராத அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதற்குத் தங்களின் எழுத்தே காரணம். இதை நான் வன்மையாக கண்(ண)டிக்கிறேன்.

இதற்கு முன்னால் ஒரு நாள் இரவில், ‘மேதைகள் நடமாட்டம்‘ என்ற கட்டுரையில் வரும் கான்ஸ்டபிள் கண்ணுச்சாமிக் கோனார் படும் கஷ்டங்கள் நினைவுக்கு வந்து, விசித்திர ஒலி எழுப்பியதால் என் மனைவியிடமும் கெட்டபெயர் ஏற்பட்டுவிட்டது. இதெற்கெல்லாம் ஒரு நாள் நீங்கள் பழனி ஆண்டவரிடமோ போப் ஆண்டவரிடமோ பதில் சொல்லியே ஆகவேண்டும்.
அன்புடன்,
ராஜன் சோமசுந்தரம்

***

முந்தைய கட்டுரைநகைச்சுவையும் தமிழ்சினிமாவும்
அடுத்த கட்டுரைஐந்தாவது மருந்து [சிறுகதை]