ஒழிமுறி இன்னும் சில விமர்சனங்கள்

ஒழிமுறி – மலையாள கலைப்படங்களில் தவிர்க்கமுடியாத ஒன்று

Snippet Review

Jeyamohan succeeds to come up with a unique plot and Madhupal makes it an interesting film to watch. ‘Ozhimuri’ is something which should not be missed, especially if you are a serious film lover.

சிறந்த புதிய இயக்குநருக்கான விருதை மதுபால் தலைப்பாவு படத்துக்காக பெற்று நான்கு வருடம் தாண்டியிருக்கிறது. அது மிகப்பெரிய வணிகவெற்றியாக ஆகவில்லை என்றாலும் விமர்சகர்களின் பாராட்டு பெற்ற படம். லால் அந்த படத்துக்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசு விருதை வென்றார்.

தலைப்பாவுக்குப் பின் லால் மையக்கதாபாத்திரமாக ஆகும் அடுத்த படம் மதுபால் இயக்கிய ஒழிமுறி. அதுவும் நான்கடவுள், அங்காடித்தெரு போன்ற கவனிக்கப்பட்ட படங்களின் ஆக்கத்தில் பங்கெடுத்த ஜெயமோகன் எழுதும் முதல் படம் என்பதனால் எதிர்பார்ப்புகளும் பெரியது. முற்றிலும் புதுமை உள்ள ஒரு கதைக்கருவை சினிமாவுக்காக எழுத ஜெயமோகனாலும் அதை நல்ல படமாக ஆக்க மதுபாலாலும் முடிந்திருக்கிறது. ஆகவே மலையாளாத்தில் பார்த்தேயாகவேண்டிய படங்களில் ஒன்றாக இந்தப் படத்தையும் சேர்க்கலாம். நீங்கள்தரமான படங்களின் ரசிகர் என்றால் கண்டிப்பாக

திருவிதாங்கூரின் தமிழில் விவாகரத்து என்ற சொல்லுக்கு உரிய வார்த்தை ஒழிமுறி. ஒழிமுறிக்காக விண்ணப்பிக்கும் இரு வயோதிக தம்பதிகளின் கதையைச் சொல்கிறது ஒழிமுறி. அவர்களின் மகனும் அவர்களும் கொள்ளும் பழைய நினைவுகள் அவற்றில் இருந்து இன்றைய யதார்த்தங்களுக்கு அவர்கள் திரும்புவதும்தான் ஒழிமுறி என்று சொல்லலாம். ஆசிப் அலியும் பாவனாவும் நடிக்கும் கதைமாந்தர்களின் உரையாடல்கள்தான் முதல்பகுதி. நடுநடுவே வரும் காட்சிகளில் பல முழுமையாக பயனளிக்கின்றன என்று தோன்றவில்லை. பல தோற்றங்களில் பல இடங்களில் நின்றும் நடந்தும் அவர்கள் பேசிக்கொள்வதை விட சிறப்பாக அவற்றைப் பயன்படுத்தியிருக்கலாம். இடைவேளைக்குப்பின் படம் மையம் நோக்கிச் செல்கிறது. மீனாட்சி என்ற கதாபாத்திரத்தை நோக்கிக் குவிந்து கதைமாந்தர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கையின் பல நுட்பமான புதிர்களை மிகச்சிறப்பாக முன்வைக்க்க இப்பகுதிகளில் எழுத்தாளரால் முடிந்திருக்கிறது. மேலும் கதைமாந்தர்களின் குணச்சித்திரத்திலும் அவர்களின் உரையாடல்களிலும் காலமாற்றங்களையும் கதைச்சூழலின் தனித்தன்மையையும் மொழியின் நுட்பத்தையும் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது எழுத்து என்று எடுத்துச் சொல்லியாகவேண்டும்

தாணுப்பிள்ளை என்ற கதாபாத்திரமாக லால், அவர் மனைவி மீனாட்சியாக மல்லிகா இருவரும்தான் இந்தப்படத்தை நடிப்பில் முக்கியமானதாக ஆக்குகிறார்கள். இருவருடைய நடிப்புவாழ்க்கையில் மிகச்சிறந்த கதாபாத்திரங்கள் இவையே. நந்துவின் வேலைக்காரன் அப்பி கதாபாத்திரம் மிகச்சிறப்பாக வடிக்கப்பட்டது. காளிப்பிள்ளையை சிறப்பாக முன்வைக்க ஸ்வேதாமேனன் முயன்றிருக்கிறார் என்றாலும் அவ்வளவு முழுமை கைகூடவில்லை என்று தோன்றியது. ஆசிப் அலி பாவனா இருவருடைய நடிப்பிலும் சராசரியிலும் மேலாகச் செல்ல முடியவில்லை.

பழைய திருவிதாங்கூர் ராஜ்யம் இன்று தமிழ்நாட்டின் எல்லையாக உள்ளது. இந்த நிலப்பகுதியின் இரு காலகட்டத்தையும் காட்டுகிறது இந்தப்படம். இந்தக் காலகட்ட மாற்றத்தைக் காட்ட கலை இயக்குநர் சிறில் குருவிளா மற்றும் உடையலங்கார நிபுணர் ரஞ்சித் அம்பாடி இருவரும் முயன்று வெற்றி பெற்றிருக்கிறார்கள். காளிப்பிள்ளையின் வயதான காலகட்டத்து மேக் அப் கொஞ்சம் பொருத்தமில்லாமலிருக்கிறதோ என்று தோன்றியது.

நீதிமன்ற அறையும் அங்கே நிகழும் வாதங்களும் இத்தனை யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பது அனேகமாக மலையாளத்தில் இதுவே முதல்முறை. காட்சிகளை மிகச்சிறப்பாகவும் மிதமாகவும் பின்னணி அமைத்தபடி பிஜிபாலின் இசை கூடவே செல்கிறது’ ஆனால் அழகப்பனின் ஒளிப்பதிவு போதுமான அளவுக்கு மேலெழவில்லை என்றே சொல்லத்தோன்றுகிறது

ஒழிமுறியை ஒரு இயக்குநர் படம் என்றே சொல்லலாம். கதைநாயகன் நாயகி என்ற இரு கதாபாத்திரங்களுக்கு நடுவே சுற்றிக்கொண்டிருக்கவில்லை இந்தப்படம். நடிகர்களுக்கும் நடிப்புக்கும் இயக்குநர் மிக மிக முக்கியத்துவம் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் சரியாகப்பொருந்தும் கதாபாத்திரங்களை தேடிப்பிடிக்கவும் அவர்களிடமிருந்து கனகச்சிதமான நடிப்பைப் பெறவும் அவரால் முடிந்திருக்கிறது. அதை இயக்குநரின் வெற்றி என்றே சொல்லலாம்.

சினிமாவை வணிகமயமாக்கி மேலும் சுவாரசியமாக ஆக்குவதற்கான எந்த முயற்சியும் இயக்குநர் செய்யவில்லை. அது மிகமிகப் பாராட்டுக்குரியது.பாட்டுகளோ வெறும் வேடிக்கைகளோ படத்தில் அறவே இல்லை. ஆகவே வெறும் பொழுதுபோக்கு ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடிக்காமல்கூட போகக்கூடும். ஆனால் நல்ல சினிமாக்களை விரும்பக்கூடியவர்கள் படம் பார்த்த நெடுநாள் பலகோணங்களில் யோசிக்கவேண்டிய பலவற்றை இந்தப்படத்தில் கண்டுபிடிக்க முடியும். அவர்கள் நிறைவும் முழுமையும் கொண்ட இந்தத் திரைப்படத்தைத் தவறவிடக்கூடாது என்று சொல்லவேண்டியிருக்கிறது


ஒழிமுறி – எழுத்தாளன் திருத்திய கடந்தகாலம்

ஜெயமோகன் பாஷாபோஷிணியில் எழுதிய நினைவுக்குறிப்புகள் -உறவிடங்கள்,இப்போது ஒழிமுறி என்ற பேரில் படமாக வந்துள்ளன. புனைவு தோற்று நிற்கும் நேரடி அனுபவங்களின் ஒரு கடல் அது. சுள்ளிக்காடின் சிதம்பரஸ்மரணைகள் என்ற நூலை நினைவுறுத்தும் கவித்துவமான எளிமை அந்த மொழிக்கு உண்டு. கூடவே அழகிய படிமங்களும். வாசிக்க வாசிக்க எழுத்துடனும் எழுத்தாளனுடனும் பிரியம் அதிகரித்தபடியே இருக்கும். இதெல்லாம்தான் மதுபால் இப்படி ஒரு படத்தை உருவாக்கத் தூண்டுகோலாக அமைந்திருக்கக் கூடும்

தன் இறந்தகால வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு ஒரு கணக்குப்பிழையைத் திருத்த இந்தத் தருணத்தை ஜெயமோகன் பயன்படுத்தியிருக்கிறார் என்று சொல்லலாம். ஒருவேளை இப்படிச் செய்திருந்தால் என் அம்மாவும் அப்பாவும் தற்கொலை செய்திருக்கமாட்டார்களே என்ற எண்ணமே அவரை இதை எழுதவைத்திருக்கக் கூடும்

உறவிடங்கள் நூலில் எந்நிரிக்கிலும் என்ற அத்தியாயத்தில் வரும் ஆழமான கதாபாத்திரங்கள்தான் இந்த சினிமாவில் உயிர்கொண்டு வருகிறார்கள். அது சொல்லப்படுகையில் ஒரு நிலப்பகுதியின் வரலாறும் அங்குள்ள மக்களின் வாழ்க்கையும் ஒட்டுமொத்தப் பண்பாடும் அப்பண்பாட்டின் தனியடையாளமான மொழியும் அனைத்துக்கும் மேலாக இவற்றை எல்லாம் எதிர்கொள்ள நேர்ந்த கலைஞனின் மனமும் இந்த சினிமாவில் உள்ளது. அவரே எழுதிய தமிழும் மலையாளமும் கலந்த தொடக்கப்பாடல் வழியாக ஜெயமோகன் தன் படத்தின் பண்பாட்டுச்சூழலைத் தெளிவாகவே காட்டியிருக்கிறார்

மீனாட்சியம்மாள் தாணுப்பிள்ளைக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுத்த விவாகரத்து மனுவில் இருந்து இப்படம் தொடங்குகிறது. அந்தப்பயணம் நினைவுகள் வழியாக இது சென்று நிற்பது ஒரு பெண்ணின் ஆன்மீகத்தேடலில். அந்த சத்தியத் தேடலில் படம் நிறைவுபெறுகிறது

முக்கிய கதாபாத்திரங்களில் லால், மல்லிகா, ஸ்வேதாமேனன் ஆகியோரின் கதாபாத்திரங்கள் சிறப்பாக இருந்தன. ஆசிப் அலியும் பாவனாவும் அவர்களின் கதாபாத்திரங்களை சரியாகவே செய்திருக்கிறார்கள். மற்ற எல்லா கதாபாத்திரங்களும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்

மிகச்சிறந்த திரைக்கதையை எந்த வணிக சமரசங்களும் இல்லாமல் முற்றிலும் நேர்மையாகப் படமாக்கியமையால் மதுபால் பாராட்டு பெறுகிறார். ஆனால் பழக்கக்குறைவு காரணமாக நிறைய சிறு பிழைகளை இயக்கத்தில் காணமுடிகிறது. ஆனால் படத்தின் ஒட்டுமொத்தத் தீவிரத்தை அவை எவ்வகையிலும் பாதிக்கவில்லை

ஒரு மண்ணை, காலத்தை, அடையாளப்படுத்தும் ஒரு எழுத்தாளனின் அந்தரங்கமான திரைப்படம் ஒழிமுறி. ஆகவே இது இதயத்தை உலுக்குகிறது


Tale of two lives

முந்தைய கட்டுரைஒழிமுறி விமர்சனங்கள்
அடுத்த கட்டுரைஒழிமுறி -மேலும் விமர்சனங்கள்