நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள்

 அன்புள்ள ஜெ

 

நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள்!!

சில வருடங்களுக்கு முன் அவர் எழுதியபாம்புஎன்ற நகைச்சுவைக் கதை நினைவுக்கு வருகிறது.. நகைச்சுவை சற்று இனிப்பும் கசப்பும்,

கலந்ததாகவே இருக்கும்பாம்பைப் பற்றிப் பேசும்போது

 

பாம்பு மலைத்துப் போயிற்று.. பாம்புகளுக்கு பாரத நாட்டில் பாஸ்போர்ட் தருவதில்லை.  பாலைவன நாட்டுக்குப் போகக் கள்ளத்தோணியும் இல்லை.  விமானங்களில் நுழைவதற்குக் கடுமையான பாதுகாப்புத் தடைகள் இருந்தன.  மேலும் அந்தப்

பாம்பு நினைத்தபடி பயணம் செய்ய மத்திய அமைச்சரோ, கிரிக்கெட் வீரரோ, டெர்ரரிஸ்டோ, சினிமா நடிகரோ,தொழிலதிபரோ

கடத்தல்காரரோ, அல்லது கலைத்தூதுவரோ இல்லை!!”

 

இந்த சரளமும் நையாண்டியும் அவருடைய முத்திரைகள்

 

சேதுராமன்

அன்புள்ள சிவப்பிரசாத்,

இப்போது நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழிமான்மியம்படித்துக் கொண்டிருக்கிறேன். நாஞ்சில்நாட்டு ‘குடிக்கிற தண்ணியில குஞ்சை விட்டு ஆழம்ப்பார்க்கும்’ எடக்குக்கு தாத்தா கவிமணி என்று தெரியவந்தது

ஜெ

அன்புள்ள ஜெமோ

நாஞ்சில் நாடனைப்பற்றிய செய்தி மகிழ்ச்சியை அளித்தது. உலகமெங்கும் அவருக்கு வாசகர்கள் இருக்கிறார்கள். அவர் எழுதுவது நாஞ்சில்நாடு என்ற உழக்கைப்பற்றி. அதன் ருசி உலகம் முழுக்கக் போகிறது. இதற்குக் காரணம் இதுதான். உண்மையான சர்வதேச இலக்கியம் என்பது ஒரு நிலப்பகுதியில் இருந்து பிரிக்கமுடியாததாக இருக்கும் என்று படித்திருக்கிறேன்.  அதுதான். எனக்கு நாஞ்சிலை நினைக்கும்போதெல்லாம் ‘மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும் விஜிடபிள் பிரியாணியும்’ என்ற கதைதான் ஞாபகம் வரும். நவீனமயமாதலை இந்தமாதிரி சொன்ன கதையே கம்மி . உங்களுடைய ‘மாடன் மோட்ச’த்துக்கு சமம்

சிவம்

அன்புள்ள சிவம்,

அந்தக்கதையை நானே போனவாரம் நினைத்துக்கொண்டேன். பார்வதிபுரம் ஜங்ஷனில் சொறிமுத்தையன் -மாடசாமி கோயிலில் தைவேத்ய பிரசாதம் வாழை இலைகளில் விளம்பிக்கொண்டிருந்தார்கள். ஆமாம், விஜிடபிள் பிரியாணியேதான்.

ஜெ

 

மாமாவுக்கு தண்ணி அடிப்பதை விட, தண்ணி அடிப்பதைப் பற்றிப் பேசுவது பிடிக்கும்! ஆட்டிறைச்சிக்குத் தொட்டுக் கொள்ள கொஞ்சம் வோட்கா என்று இருந்திருக்க வேண்டும். வரிசை மாறி விட்டது போல…

 அர்விந்த்

அன்புள்ல அர்விந்த்
நானும் ரவுடிதான்யா…என்னையும் வண்டியிலே ஏத்திக்குங்க…?
ஜெ

நாஞ்சில், வாழ்த்துக்கள்

நாஞ்சில் நாடனுக்கு கண்ணதாசன் விருது

முந்தைய கட்டுரைபண்பாட்டை பேசுதல்…
அடுத்த கட்டுரைதமிழ் ஸ்டுடியோ